என் கணவர் படம் இயக்குவார்..என்னை ஹீரோயினாக்குவார்..புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை நம்பிக்கை!

சென்னை: தன்னுடைய கணவர் படம் இயக்குவார் என்றும் தன்னை ஹீரோயினாக்குவார் என பிரபல நடிகையான கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

எல்லாரும் நிறைய Advice பண்ணாங்க Kamali From Naducauvery

தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. தமிழில் கயல் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்ததால் கயல் ஆனந்தி ஆகிவிட்டார்.

தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் கயல் ஆனந்தி. தற்போது டைட்டானிக் காதலும் கவுந்து போகும், ஏஞ்சல், ராவண கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஆனந்தி.

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

மேலும் எங்கே அந்த வான், அலாவுதினின் அற்புத கேமரா ஆகிய படங்களுக்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகை கயல் ஆனந்தி கடந்த மாதம் திடீரென திருமணம் செய்துக் கொண்டார். திருமண போட்டோக்கள் இணையத்தில் கசிந்து வைரலானது.

கமலி ஃபிரம் நடுக்காவேரி

கமலி ஃபிரம் நடுக்காவேரி

இந்நிலையில் கயல் ஆனந்தி நடித்துள்ள கமலி ஃபிரம் நடுக்காவேரி படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய கயல் ஆனந்தி, தனது திருமணம் குறித்தும் தனது கணவர் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

முக்கியமான படம்

முக்கியமான படம்

அவர் பேசியதாவது, என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும்.

என்னுடைய அதிர்ஷ்டம்

என்னுடைய அதிர்ஷ்டம்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோன்ற படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. பலர் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்றார்.

காதல் திருமணம் அல்ல

காதல் திருமணம் அல்ல

தொடர்ந்து தனது திருமணம் குறித்து பேசிய அவர், என் திருமணத்தை சென்னையில் ஒரு வரவேற்பு வைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதற்குள் தகவல் வெளியில் கசிந்துவிட்டது. இது காதல் திருமணம் அல்ல. முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணம்.

என்னை ஹீரோயினாக்குவார்

என்னை ஹீரோயினாக்குவார்

அவர் எங்கள் குடும்ப நண்பர். மரைன் இஞ்சினியர் ஆவார். மேலும் இணை இயக்குனராகவும் உள்ளார். விரைவில் அவர் படம் இயக்குவார். எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தருவார் என காத்திருக்கிறேன். திருமணத்துக்கு முன்பே நான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். இனியும் அப்படியே நடிப்பேன். இவ்வாறு கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X