பிரபல நடிகருக்கும், நடிகைக்கும் கள்ளத்தொடர்பா?: அந்தர் பல்ட்டி அடித்த டிவி நடிகர்
மும்பை: நடிகை மான்சிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட நடிகர் மோஹித் அப்ரால் அந்தர் பல்ட்டி அடித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி நடிகர் மோஹித் அப்ராலுக்கும், தொலைக்காட்சி நடிகை மான்சி ஸ்ரீவஸ்தவாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மான்சி நடிகர் அர்ஹான் பெஹலுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக மோஹித் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் இந்த தகவல் அறிந்ததும் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இனியாவது எந்த காதலரையும் ஏமாற்றாமல் உண்மையாக இருக்குமாறு மோஹித் மான்சிக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் அந்த போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். இந்நிலையில் மோஹித் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அந்தர் பல்ட்டி அடித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
யாரோ என் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து மான்சியின் ஃபேஸ்புக் ப்ரொபைல் புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளனர். இது குறித்து எனக்கு இன்று காலை தெரிய வந்ததும் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டேன். தற்போது என் கணக்கு பாதுகாப்பாக உள்ளது. அந்த போஸ்ட்டில் குறிப்பிடப்பட்டது எதுவும் உண்மை இல்லை. யாரோ மான்சியின் பெயரை கெடுக்க நினைத்து இப்படி மோசமான கதை விட்டுள்ளனர்.
இதை செய்தவரை நினைத்து கவலைப்படுகிறேன்.
இது தொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போகிறேன். இந்த செய்தியால் எங்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை உடனே நீக்குமாறு அனைத்து இணையதளங்கள், செய்தித்தாள்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மோஹித் அப்ராலின் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் அது எப்படி அனைத்து பிரபலங்களும் ஏதாவது பிரச்சனை என்று வந்துவிட்டால் சர்ச்சைக்குரிய போஸ்ட்டை நீக்கிவிட்டு சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று ஒரே மாதிரி கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











