இழவு வீட்டில் எனது இண்ட்ரோ... டிரைவர் ஜமுனா புரமோஷனில் ஐஷ்வர்யாவின் சுவாரசிய பேட்டி

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்த படங்கள் ஒவ்வொன்றுமே தனித்துவம் வாய்ந்தவை.

அட்டக்கத்தி யில் தொடங்கி இப்போது டிரைவர் ஜமுனா வரை அவர் நடித்துள்ள பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் டிரைவர் ஜமுனா திரைப்படம் சம்பந்தமாக கொடுத்துள்ள பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

திரையரங்க அனுபவம்

திரையரங்க அனுபவம்

கனாவிற்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து உங்கள் படம் திரையரங்குகளில் வருவதை எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிப்பதையே பெரிய பொறுப்பாக கருதுகிறேன். ஓடிடியில் வரும்போது அதிக மக்களை சென்றடையும், தயாரிப்பாளருக்கும் லாபத்தை தரும். அதனால், அதில் பெரிய பயம் கிடையாது. ஆனால் திரையரங்கு என்று வரும்போது, பெரிய பொறுப்பு இருக்கிறது. தேடி வந்து எத்தனை மக்கள் பார்க்கிறார்கள் என்று திரையரங்கம் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

வருத்தம் தெரிவித்த ஐஷ்வர்யா

வருத்தம் தெரிவித்த ஐஷ்வர்யா

ஐஸ்வர்யா ராஜேஷ் 'இன் அண்ட் ஆஸ் டிரைவர் ஜமுனா' என்று பட தலைப்பிற்கு மேல் உங்களது பெயரை பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு காலத்தில் நமக்கு யாராவது கதை சொல்ல மாட்டார்களா என்று காத்திருந்தேன். ஆனால் இப்போது கதைகள் கேட்க முடியாத அளவிற்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய கதைகள் கேட்க முடியவில்லை என்ற வருத்தம் கண்டிப்பாக இருக்கிறது. அதில் சில கதைகள் எனக்காகவே எழுதப்பட்டவை என கூறியிருக்கிறார்.

கார் அனுபவம்

கார் அனுபவம்

முதன்முதலாக தனது சொந்த காசில் வாங்கியது ஆட்டோமெட்டிக் ஐ10 கார்தானாம். அந்தக் காரில்தான் கார் ஓட்டுவதற்கு தான் பயிற்சி பெற்றதாகவும், சாலைகளில் பல நபர்களிடம் அசிங்கமாக திட்டு வாங்கி இருக்கிறேன், இப்போது கூட அந்தக் கார் என்னிடம்தான் இருக்கிறது. அப்படி கற்றுக் கொண்டதால்தான் இப்போது டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் அளவிற்கு தனக்கு அனுபவம் கிடைத்ததாக ஐஸ்வர்யா கூறியிருக்கிறார்.

பிடித்த அறிமுகக் காட்சி

பிடித்த அறிமுகக் காட்சி

அட்டக்கத்தி அமுதா ஒரு கியூட்டான கதாபாத்திரம். சிறுவயதில் நான் ஹவுசிங் போர்டில் வளர்ந்ததால் அமுதா போல் நிறைய நபர்களை சந்தித்துள்ளேன். வட சென்னையை பொருத்தவரை வெளிநாட்டிற்கு சென்றால், எப்போது 2-ஆம் பாகம் வரும் என்று கேட்பார்கள். எத்தனை படங்கள் நடித்தாலும் காக்கா முட்டைதான் இன்றுவரை எனக்கு அடையாளமாக இருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என்னுடைய அறிமுகக் காட்சிதான். கதாநாயகியை ஒரு இழவு வீட்டில் அறிமுகம் செய்திருப்பார் இயக்குநர் அருண் என தனது படங்கள் பற்றி சுவாரசியமாக பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X