என் பெர்சனல் தெரியுமா?.. அதற்காக நான் நல்லவ கிடையாது.. வனிதா விஜயகுமார் ஓபன்

சென்னை: விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா 90களில் சினிமாவில் ஹீரோயினாக நடித்தவர். விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் எல்லாம் நடித்தார். பிறகு திடீரென அவர் திருமணமாகி செட்டிலானார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை நல்லபடியாக போகவில்லை. அதிலிருந்து வெளியே வந்து சில திருமணங்கள் செய்துகொண்ட அவருக்கு அதுவும் சரியாக அமையவில்லை. இப்போது சிங்கிளாக இருக்கும் அவர் Mrs&Mr என்ற படத்தையும் இயக்கினார்.

வனிதா விஜயகுமார் தமிழ்நாட்டில் எல்லோராலும் இப்போது அறியப்பட்டவர். ஆனால் ஆரம்பத்தில் பெரிய பிரபலமாக இல்லை. சில படங்களில் ஹீரோயினாக நடித்த அவர்; தந்தையுடன் சண்டை, தொடர் திருமணங்களால் வெளிச்சத்துக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்தினரோடு இன்னமும் பேசாமல் இருக்கிறார். பேசுவதற்கு எவ்வளவோ வனிதா தரப்பிலிருந்து முயன்றாலும் விஜயகுமார் தரப்பிலிருந்து அதற்கான க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

My Kids Liking Me Doesn t Mean I m Good Vanitha Vijayakumar s Viral Interview
Photo Credit:

பிக்பாஸ் வனிதா: சண்டைகள், சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அங்கும் தனது அதிரடி நடவடிக்கைகளால் கவனத்தை ஈர்த்தவரால்; டைட்டிலை மட்டும் வெல்ல முடியவில்லை. இருப்பினும் அவர் எதிர்பார்த்த பிரபல்யம் கிடைத்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அநீதி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான ரோலை அவர் ஏற்று நடிக்கவும் செய்தார். இதற்கிடையே அவரது மகள் ஜோவிகாவும் பிக்பாஸில் கலந்துகொண்டு தாய் வழியில் அதிரடி காண்பித்தார்.

இயக்குநர் வனிதா: சூழல் இப்படி இருக்க ராபர்ட் மாஸ்டரை ஹீரோவாக வைத்தும் தான் ஹீரோயினாக நடித்தும் Mrs&Mr என்ற படத்தை இயக்கினார் வனிதா. கடந்த வருடம் தியேட்டர்களில் ரிலீஸானது. ஜோவிகாதான் படத்தை தயாரித்திருந்தார். எதிர்பார்த்தபடியே படம் படு க்ரிஞ்சாகவும், ஆபாசமாகவும் இருந்ததாக படம் பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். அதுமட்டுமின்றி எந்த ஓடிடி நிறுவனமும் அந்தப் படத்தை வாங்குவதற்கு முன்வரவில்லை. எனவே யூடியூபிலேயே வெளியிட்டார்.

Also Read
அப்படி செய்வார்கள் மயங்கிடாதீங்க சி.எம் விஜய் சார்.. பிரபலம் இப்படி ஒரு அட்வைஸை போட்டிருக்காரே
அப்படி செய்வார்கள் மயங்கிடாதீங்க சி.எம் விஜய் சார்.. பிரபலம் இப்படி ஒரு அட்வைஸை போட்டிருக்காரே

ட்ரெண்டாகும் வனிதாவின் பேட்டி: இந்நிலையில் வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், "ஒரு பெர்சனாக எனக்கே என்னை ரொம்ப பிடிக்கும். நல்ல ஒரு நண்பராகவும் இருப்பேன். என்னை பெர்சனலாக உங்களுக்கு தெரியும் என்றால் கண்டிப்பாக என்னை உங்களுக்கு பிடிக்கும் என்றுதான் சொல்வேன். அம்மா என்பது ஒரு பொறுப்பு.

எல்லோருக்குமே பிடிக்கும்: எல்லா குழந்தைகளுக்கும் அம்மாவை பிடிக்கும். எல்லா அம்மாக்களுக்கும் குழந்தைகளை பிடிக்கும். அது ஒரு விதியின் முறை. அதுதானே இயற்கை. அதேசமயம் என் பிள்ளைகளுக்கு என்னை பிடிக்கும் என்பதற்காக நான் நல்லவள் கிடையாது; எனக்கு என் பிள்ளைகளை பிடிக்கும் என்பதற்காக அவர்களும் நல்லவர்கள் கிடையாது" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பேட்டியை ரசிகர்களும் அதிகம் பகிர்ந்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X