33 வருஷ கனவு இன்று நிறைவேறிவிட்டது: குஷ்பு சூப்பர் ஹேப்பி
சென்னை: நடிகை குஷ்புவின் 33 வருஷ கனவு இன்று நிறைவேறியுள்ளது.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மனதில் பட்டத்தை எல்லாம் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் போட்ட ஒரு ட்வீட் பலரின் கவனத்தை ஈர்த்தது.
அந்த ட்வீட்டில் குஷ்பு கூறியிருப்பதாவது,
கனவு
பல காலமாக நிறைவேறாத என் கனவு இன்னும் சில நிமிடங்களில் நிறைவேறப் போகிறது. என் இதயம் சப்தமாக துடிப்பது எனக்கே கேட்கிறது. வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன. சந்தோஷமாக உள்ளது என்று ட்வீட்டினார் குஷ்பு.
ரசிகர்கள்
குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அது என்ன கனவு என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். சிலர் அந்த கனவை கணித்தும் உள்ளனர்.
அரசு
மேடம், அப்போ கண்டிப்பாக அரசு டிஸால்வ் ஆயிடும்னு சொல்றீங்க என்று ஒருவர் கிண்டலாக கமெண்ட் போட்டுள்ளார்.
ஹாலிவுட்
ஹாலிவுட் போகிறீர்களா என்று ஒருவர் குஷ்புவிடம் ட்விட்டரில் கேட்டுள்ளார். பலரும் குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
ரவி சாஸ்திரி
என் கனவு நிறைவேறிவிட்டது. ஒரு வழியாக என் ஹீரோ ரவிசாஸ்திரியை சந்தித்தேன். அவரை சந்திக்க 33 ஆண்டுகள் காத்திருந்தேன் என்று குஷ்பு ட்வீட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











