My Lord Day 1 collection: சசிகுமாரின் ‘மை லார்ட்‘ முதல் நாள் வசூல்.. தரமான சம்பவம் செய்த இயக்குநர்!
சென்னை: சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை சாட்டையை வைத்து அடித்து அழுத்தமாக 'மை லார்ட்' படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். இப்படத்தில் சசிகுமார், சைத்ரா அச்சர் ஆகியோர் நடித்துள்ளனர். நேற்று தியேட்டரில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ள நிலையில் படத்தின் முதல் வசூல் குறித்த தகவலை பார்க்கலாம்.
சசிகுமார், சைத்ரா அச்சர் இருவரும் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்யும் போது காதல் வளர இருவரும்
திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணத்திற்கு பின், சைத்ராவிற்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. உடலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறுகிறது. தனது மனைவிக்கு வந்துள்ள பிரச்சனையை சரி செய்ய பல மருத்துவமனைகளுக்கு இருவரும் ஏறி இறங்குகிறார் சசிகுமார். வட்டி வாங்கிய பணம் செல்வாகிறதே தவிர, நோய் சரியாகவில்லை. தொடர்ந்து கடன் வாங்கி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேல் கடனாகிறது. கடனை திருப்பித்தர முடியாத சூழ்நிலையில் சசிகுமார் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்.

மை லார்ட்: மறுபக்கம் மத்திய அமைச்சர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கிட்னி கிடைத்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்கிற நிலையில் இருக்கிறார். சசிகுமாரின் கிட்னி அவருக்கு சரியாக பொருந்தும் என்பதை அறிந்து கிட்னியை தரும்படி கேட்கிறார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் இவர்கள் பத்திரிகையாளர் குரு சோமசுந்தரத்தை சந்தித்து நடந்ததை கூறி, இதற்கான நியாயம் வேண்டும் என போராடுகிறார்கள். இவர்களுக்கு நியாயம் கிடைத்ததா? இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதை.
முதல் நாள் வசூல்: படத்தை பார்த்த பலரும் படம் தத்ரூபமாக இருப்பதாகவும், யாரும் தொடாத படத்தை இயக்குநர் தொட்டு இருக்கிறார் என படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். நேற்று தியேட்டரில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ35 லட்சத்தை வசூலித்துள்ளது. படம் குறைந்த அளவு தியேட்டரில் வெளியான போதும் படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











