சட்டையை கழட்டிவிட்டு.. முதுகு மச்சத்தை காட்டும் சசிகுமார் பட கதாநாயகி.. இன்ஸ்டாகிராமே மிரளுது!

சென்னை: ஓடிடி தளங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால் எதிர்காலத்தில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, ஹிந்தி சினிமா என பிரித்துப் பார்ப்பது என்பது இருக்காது. இந்தியா முழுவதும் உள்ள மக்களும் சினிமா ரசிகர்களும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் படங்கள் பார்க்கிறார்கள். அதை விவாதிக்கிறார்கள் இப்படி இருக்கும்போது, திறமையான நடிகர்களை, சினிமா கலைஞர்களை அடையாளம் கண்டு வருகிறார்கள். முன்பெல்லாம், வசீகரமான தோற்றம் கொண்ட நடிகர்கள் நடிகைகளை தான் தயாரிப்பாளர்கள் தொடங்கி, இயக்குநர்கள் வரை எதிர்பார்த்தனர். ஆனால் இன்றைக்கு இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

My Lord Chaithra Achar Chaithra Achar Glamour Photos

திறமையான நடிப்பு, கதாபாத்திரத்திற்கு ஒத்துப்போகும் உடல் அமைப்பு ஆகியவற்றை தான் பார்க்கிறார்கள். வசீகரமான முகத்தோற்றம் கொண்ட நடிகர், நடிகைகள் கூட நடிப்பில் தங்களது திறமையை நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அப்படியான ஒருவர்தான் கன்னட சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சைத்ரா ஆச்சர். தமிழ் சினிமாவில் தற்போது, ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் 'மை லார்ட்' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஆடை எதுவும் அணியாமல் தனது முதுகை காட்டியபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்துடன் மேலும் சில கிளாமரான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

My Lord Chaithra Achar Chaithra Achar Glamour Photos

சசிகுமார் கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிற மாதிரியான படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான அயோத்தி மாபெரும் ஹிட் படமாக மாறியது. இப்படியான நிலையில் இவரது நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்க ஓடிடி நிறுவனங்களுக்கு இடையே பலமான போட்டி நிலவியது என கூறப்படுகிறது.

My Lord Chaithra Achar Chaithra Achar Glamour Photos

சைத்ரா ஆச்சர்: அதேபோல் சசிகுமார் நடிக்கும் மற்றொரு படத்தின் பெயர் 'மை லார்ட்'. இந்த படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்குகிறார். அம்பேத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார், சைத்ரா ஆச்சர். கன்னட சினிமாவில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். 'மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி, அதாவது குடியரசு தினத்தன்று வெளியிடப்பட்டது.

My Lord Chaithra Achar Chaithra Achar Glamour Photos

மை லார்ட்: இதில் சசிகுமார் மற்றும் சைத்ரா ஆச்சர் பீடி குடித்துக் கொண்டு, ஏதோ ஒன்றிற்காக காத்துக் கொண்டு இருப்பது போல இருந்தனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படி இருக்கும்போது, 'மை லார்ட்' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை சைத்ரா ஆச்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

My Lord Chaithra Achar Chaithra Achar Glamour Photos

கிளாமர்: அதாவது, சைத்ரா ஆச்சர், ஆடை எதுவும் அணியாமல், அரை நிர்வாணமாக தனது முதுகை காட்டியபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்துடன் மேலும் இரண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு புகைப்படங்களில் சட்டை அணிந்து கொண்டு, அத்துடன், அதில் பட்டன் எதுவும் போடாமல் போஸ் கொடுத்துள்ளார். செம கிளாமராக இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் , இன்ஸ்டாகிராமிலும் வேகமாக பரவி வருகிறது. சைத்ரா ஆச்சரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் இந்த புகைப்படங்களை பிளாக் அண்ட் வொய்ட்டில் பகிர்ந்துள்ளார்.

My Lord Chaithra Achar Chaithra Achar Glamour Photos

More from Filmibeat

Read more about: actress
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X