My Lord Vs Pookie Box Office Day 1: மை லார்ட் - பூக்கி முதல் நாள் வசூலில் 'ராஜாவாக' உருவெடுத்தது யார்?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் நடித்தால் தான் பாக்ஸ் ஆபீஸ் வசூல் அள்ளுகிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அவர்கள் படம் கொஞ்சம் பிசகினாலும் முதல் மூன்று நாட்களுக்குப் பின்னர் கடமைக்கு என்று தான் படமே ஓட்டிக் கொண்டு இருப்பார்கள் தியேட்டர் ஓனர்கள். இப்படி இருக்கையில் சிறிய பட்ஜெட்டில் அழுத்தம் திருத்தமான கதை, பொருத்தமான நடிப்பு என ஒரு படம் சரியான மீட்டரில் இருக்கும் போது அவை பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி விடுகிறது.

முன்னணி கதாநாயகர்கள் படம் வெளியாகும் போது இருக்கும் பரபரப்பு இப்படியான படங்கள் வெளியாகும் போது இல்லை என்றாலும், ரசிகர்கள் இப்படியான படங்களை ஓரளவுக்கு கை கொடுத்து தூக்கி விடுகிறார்கள். சில படங்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுகிறது. இப்படி இருக்கையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி, சான் ரோல்டன் இசையில் வெளியாகி உள்ள படம் மை லார்ட்.

My Lord Vs Pookie Box Office Collection Day 1 Comparison

இந்த படம் அறிவிக்கப்பட்ட போதே ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் இயக்குநர் ராஜு முருகன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் என்பதுதான் முதல் விஷயம். இவர்களுடன் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார் என்றதும் படம் அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதையம்சம் கொண்ட படமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அதேபோல் படம் வெளியாகி முதல் நாளில் ரசிகர்கள் படத்தை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ்: வழக்கமான ராஜு முருகனின் திரை சொல்லலான ரத்தமும் சதையுமான திரைக்கதை, உயிரோட்டமான நடிப்பு, கச்சிதமான பின்னணி இசை என எல்லாவற்றையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். சசிகுமார் மற்றும் சைத்ரா ஆச்சர் என இருவருமே கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார்கள் என பாராட்டுகள் குவிந்து வருகிறது, படம் முதல் நாளில் ரூபாய் 35 லட்சம் பாக்ஸ் அபீஸில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் எப்படியும் வரும் நாட்களில் படம் கூடுதலாக வசூலிக்கும் என்றும் படக்குழு எதிர்பார்க்கிறது.

My Lord Vs Pookie Box Office Collection Day 1 Comparison

பூக்கி: அதேபோல் நேற்று வெளியான மற்றொரு புதிய படம் என்றால் அது விஜய் ஆண்டனி தயாரிப்பு மற்றும் இசையில் உருவான படமான பூக்கி. இந்த படத்தில் அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார் கணேஷ் சந்திரா. படம் இந்த கால இளசுகளுக்கு ஏற்றவகையில் அவர்களின் காதல் கதையைச் சொல்லும் படமாக உருவாக்கப்பட்டுள்ளதால், படம் இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று படக்குழு நம்புகிறது.

வசூல்: குறிப்பாக காதலர்கள் இருவரும் காதலில் இருந்து பிரிய அவர்கள் சொல்லும் காரணங்கள் எடுக்கும் முயற்சிகள் தான் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 20 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இளசுகள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று படக்குழு நம்புவதால் வரும் காலங்களில் படத்தின் வசூல் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X