அவங்க என் மாமியார் இல்ல அம்மா, தோழி: ஃபீல் பண்ண தனுஷ் ஹீரோயின்

By Siva

மும்பை: என் மாமியார் எனக்கு கிடைத்த அம்மா என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பாலிவுட் நடிகைகள் ராணி முகர்ஜி, சோனம் கபூர் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் வித்யா பாலன் நடத்தும் ரேடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் அவர்கள் தங்களின் மாமியார்கள் பற்றி பேசினார்கள்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

நான் என் மாமியாரை அம்மா என்றே சொல்ல விரும்புகிறேன். அவருக்கு 2 பிள்ளைகள். என்னை மூன்றாவது பிள்ளையாகத் தான் பார்க்கிறார். அவர் தான் என் தோழி, அதே சமயம் என் அம்மா. என் அம்மா என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரோ அதே அளவுக்கு என் மாமியாரும் என் மீது பாசம் வைத்துள்ளார் என்கிறார் சோனம்.

மகள்

மகள்

என் மாமியாருக்கு பெண் பிள்ளை இல்லை. அதனால் தனது மகன் மூலம் தனக்கு மகள் கிடைத்துவிட்டதாக அவர் அடிக்கடி கூறுவார். அனைவருக்கும் என்னை போன்று அருமையான, பாசமான மாமியார் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

ராணி முகர்ஜி

ராணி முகர்ஜி

என் மாமியார் ஒரு அருமையான மனுஷி. என் கணவர் ஆதித்யா சோப்ராவை நல்ல முறையில் வளர்த்துள்ளார். அதற்காக நான் அவருக்கு தினமும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை ராணி முகர்ஜி கூறியுள்ளார்.

ஜூஹி சாவ்லா

ஜூஹி சாவ்லா

என் மாமியார் எப்பொழுதுமே எனக்கு ஆதரவாக இருப்பார். அவர் உகாண்டா வந்து என் குழந்தைகளை பார்த்துக் கொண்டார். நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எல்லாம் அவர் தான் என் பிள்ளைகளை பார்த்துக் கொண்டார் என்கிறார் நடிகை ஜூஹி சாவ்லா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X