என் மாமியார் தான் 'என் உலகம்': இப்படி சொல்வது ஒரு பிரபல நடிகை
பெங்களூர்: மாமியார் தான் என் உலகம் என்று ஒரு நடிகை கூறியதை கேட்டு வியக்காதவர்களே இல்லை.
பிரபல கன்னட நடிகை ராதிகா பண்டிட் நடிகர் யஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ராதிகா தனது மாமனார், மாமியார் மெச்சும் மருமகளாக உள்ளார்.
அதே போன்று யஷும் தனது மாமனார், மாமியார் கொண்டாடும் மருமகனாக நடந்து கொள்கிறார்.

யஷ்
யஷ், ராதிகா பண்டிட் தங்கள் மகளுக்கு யஷிகா என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பார்க்க அப்படியே யஷ் மாதிரியே இருப்பதாக ராதிகா தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தான் யஷிகா பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகா
ராதிகா கன்னட தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவரிடம் உங்கள் மாமியாரை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் என் உலகம் என்று பதில் அளித்தார்.

மருமகள்
ஒரு மாமியாரை மருமகள் தன் உலகம் என்று சொல்வது அந்த காலத்தில் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் இந்த காலத்தில் அது ஆச்சரியப்படும் விஷயம். அப்படி இருக்கும்போது ராதிகா தனது மாமியாரை புகழ்ந்து பேசுவதை பார்த்து பிரபலங்களும், ரசிகர்களும் வியக்கிறார்கள்.

சாம்பார்
என் மாமியார் போன்று யாராலும் சுவையாக சமைக்க முடியாது. அவர் வெறும் சாதம், சாம்பார் செய்தால் கூட அவ்வளவு ருசியாக இருக்கும் என்கிறார் ராதிகா. பேட்டிகளில் மட்டும் இல்லை சமூக வலைதளங்களிலும் ராதிகா தனது மாமியாரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











