என் தந்தையிடம் அனுமதி பெற்று காதலை சொன்னார் அஸ்வின்: சௌந்தர்யா ரஜினிகாந்த்
சென்னை: எங்கள் வீட்டில் எங்கள் அம்மா தான் பாஸ் என்று ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வினுக்கு தனது நிஜப் பெயரான ஷக்கு பாய் ராவ் கெய்க்வாட் தான் பிடிக்குமாம். சௌந்தர்யாவுக்கு நடிக்க வாய்ப்புகள் வந்த போதிலும் அவர் கேமராவுக்கு பின்னால் இருக்கவே விரும்புகிறார்.
அவர் தனது தந்தையை வைத்து எடுத்துள்ள கோச்சடையான் படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அம்மா தான் பாஸ்
சௌந்தர்யா அம்மா செல்லமாம். தனது அப்பா 200 சதவீதம் அம்மாவை நம்பித் தான் உள்ளார் என்றும், லதா தான் வீட்டில் பாஸ் என்றும் சௌந்தர்யா தெரிவித்தார்.

சுல்தான்
சுல்தான் படத்தை நான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கினேன். ஆனால் பல்வேறு காரணங்களால் படம் கைவிடப்பட்டது. சுல்தானுக்கும் கோச்சடையானுக்கும் தொடர்பில்லை என்றார் சௌந்தர்யா.

தந்தையை இயக்கும் மகள்
தந்தையை இயக்கும் முதல் மகள் சௌந்தர்யா தான். ரஜினியும், தீபிகாவும் நடித்த காதல் காட்சிகள் அழகாக இருந்தாலும் மகளாக இருந்து பார்த்தபோது ஒரு மாதிரியாக இருந்தது என்றார் சௌந்தர்யா. சௌந்தர்யாவின் ஹீரோ ரஜினியாம். நான் தீவிர ரஜினி ரசிகையாக்கும் என்று பெருமைப்படுகிறார் சௌந்தர்யா.

அக்காவும் நானும்
அக்கா ஐஸ்வர்யாவும், தங்கை சௌந்தர்யாவும் வித்தியாசமானவர்களாம். ஐஸ்வர்யா வீணை வகுப்பு செல்ல, சௌந்தர்யாவோ கோல்ப் விளையாட சென்றுள்ளார். ஆடையில் இருந்து அணைத்திலும் இருவருக்கும் வேறு வேறு ரசனையாம்.

கணவர்
சௌந்தர்யாவின் காதல் கணவர் அஸ்வின் அவரிடம் தனது காதலை சொல்லி மோதிரம் அணிவிக்கும் முன்பு அதை ரஜினியிடம் தெரிவித்து சம்மதம் வாங்கினாராம். தனுஷ் மற்றும் ரஜினியின் லைப்ஸ்டைல் ஒரே மாதிரி இருக்கும் என்றார் சௌந்தர்யா.

தந்தை போன்று
நான் என் தந்தை போன்று விடா முயற்சியுடையவள் என்று சௌந்தர்யா தெரிவித்தார். என் தந்தை ஒரு பேருந்து நடத்துநராக இருந்தார். அவருக்கு தமிழில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. ஆனால் அவருடைய விடா முயற்சியால் அவர் இன்று எங்கு இருக்கிறார் என்று பாருங்கள்.

ஆடிப்போய்விட்டோம்
தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது ஆடிப்போய்விட்டோம். அதற்கு முன்பு என் அம்மாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. என் அம்மாவுக்கு 53 வயது, அப்பாவுக்கு 62. அவர்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் அது என்னை பாதிக்கும் என்று சௌந்தர்யா கூறினார்.


Click it and Unblock the Notifications











