'அப்பா நடிப்பதை நிறுத்திடனும்னு அம்மா தினமும் பிரேப் பண்ணாங்க'.. விக்ரம் மகன் துருவ் சொன்ன ரகசியம்!
தனது தந்தை சினிமாவில் இருந்து வெளியேற வேண்டும் என தாய் பிரார்த்தனை செய்ததாக நடிகர் துருவ் விக்ரம் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: தனது தந்தை நடிகர் விக்ரம் சினிமாவில் இருந்து வெளியேற வேண்டும் என தனது தாய் தினமும் பிரார்த்தனை செய்ததாக நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வாங்கா இயக்கத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்த படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா தான் ஆதித்ய வர்மாவை இயக்கியுள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

துருவ் விக்ரம்
படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு துருவ் விக்ரம் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர், தனது குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

அம்மாவின் பிரார்த்தனை
''சேது படத்துக்கு முன்பாக என் அப்பா மிகவும் கஷ்டப்பட்டிருந்த சமயத்தில் அவர் சினிமாவைக் கைவிட வேண்டும் என்று என் அம்மா தினமும் பிரார்த்தனை செய்தார். பின்னாட்களில் 'சேது' படத்தையும் அதில் என் அப்பாவின் கடின உழைப்பையும் பார்த்த பிறகு, அவருக்கு இன்று வரை உறுதுணையாக இருந்து வருகிறார்", என துருவ் தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரம், இந்த இடத்திற்கு வர மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். துருவ் விக்ரம் தனது தந்தையின் உழைப்பை உணர்ந்திருக்கிறார் என்பதையே இந்த பேட்டி உணர்த்துகிறது.

வழிகாட்டி
அதேபோல் விக்ரமும் தனது மகனின் அறிமுகப்படம் நன்றாக வர வேண்டும் என்பதில் எவ்வளவு ஈடுபாடு காட்டினார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆதித்ய வர்மா படத்திற்கு ஏறக்குறைய ஒரு இணை இயக்குனர் போலவே விக்ரமும் படப்பிடிப்பு தளங்களில் கூடவே இருந்து துருவ்விற்கு நடிப்பில் வழிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











