'15 வயதில் அம்மா சம்மதத்துடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன்'.. பிரபல நடிகை ஷாக் தகவல்..!

தன்னுடைய தாயே தன்னை பணத்துக்காக பாலியல் தொழிலில் தள்ளியதாக பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

பிரபல நடிகை டெமி மூர் பேட்டி-வீடியோ

சென்னை: தன்னுடைய தாயின் சம்மதத்துடன் 15 வயதில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்லீஸ் ஏஞ்சல்ஸ், இண்டீசெண்ட் புரொபோசல், கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை டெமி மூர். 1980 மற்றும் 90களில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்த டெமிக்கு தற்போது 56 வயதாகிறது.

இன்சைட் அவுட் என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதி, புத்தகமாக வெளியிட்டுள்ளார் டெமி மூர். இதில் அதிரடியாக பல விஷயங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொன்றும் ஒரு பாம் போல் வெடித்து வருகிறது.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

அந்த புத்தகத்தில் முக்கியமாக தனது தாயை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார் டெமி. தனது அம்மா மது மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என டெமி தெரிவித்துள்ளார். தனக்கு 12 வயது இருக்கும் போது தனது தாய் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது வாயில் கையைவிட்டு மாத்திரைகளை வெளியில் எடுத்து தாயை காப்பாற்றியதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

"எனக்கு அப்போது 15 வயது இருக்கும். ஒரு நாள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினேன். அப்போது ஒரு வயதான ஆள் என் வீட்டில் இருந்தார். யார் என யோசிக்கும் போதே அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய தொடங்கினார். என்னுடைய அம்மாவிடம் 500 அமெரிக்க டாலர் கொடுத்து என்னை விலைக்கு வாங்கியிருக்கிறார் அந்த மனிதர்", என அதிர்ச்சி அளிக்கும் தகவலை டெமி தெரிவித்துள்ளார்.

மிகவும் பாதிக்கப்பட்டேன்

மிகவும் பாதிக்கப்பட்டேன்

பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு பிறகு மனதளவில் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக டெமி கூறியுள்ளார். பார்களுக்கு குடிக்க போகும் போது தன்னையும் தனது தாய் உடன் அழைத்து செல்வார் என்றும், அதனால் தனக்கு பாதிப்புகள் மேலும் அதிகமாகியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்மாவுக்கு சமர்ப்பணம்

அம்மாவுக்கு சமர்ப்பணம்

அந்த புத்தகத்தில் தன்னுடைய முன்னாள் கணவர் மற்றும் மூன்று மகள்கள் பற்றி அதிகமாக பேசியுள்ளார் டெமி மூர். தனது சுயசரிதையான இன்சைட் அவுட் புத்தகத்தை, தனது தாய் மற்றும் மூன்று மகள்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X