விஜய் படத்தின் கதையே வேற, அது கசியவே இல்லீங்க: சொல்கிறார் முருகதாஸ்

By Siva

ஹைதராபாத்: தான் விஜய்யை வைத்து எடுத்து வரும் படத்தின் கதை கசியவில்லை என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

முருகதாஸ், விஜய் கூட்டணி துப்பாக்கியை அடுத்து தற்போது மீண்டும் சேர்ந்து பணியாற்றி வருகிறது. அவர்களின் படத்திற்கு தீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் கதை கசிந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.

டோட்டா ராய்

டோட்டா ராய்

விஜய் படத்தின் வில்லன் டோட்டா ராய் சவுத்ரி என்றும், அவர் தான் பேட்டி ஒன்றின்போது கதையை தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் முருகதாஸ் கூறுவது வேறாக உள்ளது.

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

கொல்கத்தாவில் வில்லன் டோட்டாவை பிடிக்க போலீசாருக்கு விஜய் உதவுகிறாராம். சிறையில் இருந்து தப்பித்து விஜய்யை பழிவாங்க சென்னை வருகிறார் வில்லன். வந்த இடத்தில் விஜய் போன்றே இன்னொருவர் இருப்பதை தெரிந்து கொண்டு தன்னை சிக்க வைத்த விஜய்யை தேடுகிறாராம். வில்லன் விஜய்யை கண்டுபிடித்தாரா, விஜய் எப்படி தப்பித்தார் என்பது தான் கதை என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முருகதாஸ்

முருகதாஸ்

நான் விஜய்யை வைத்து எடுக்கும் படத்தின் கதையே வேறு. இணையதளத்தில் வெளியாகியுள்ள கதை என் படக் கதையே இல்லை என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் படமாக்கப்பட்ட காட்சிக்கு ஒருவர் தேவைப்பட்டார். அதனால் அந்த காட்சியில் டோட்டா ராயை நடிக்க வைத்தோம். அவ்வளவு தான் என்றார் முருகதாஸ்.

வில்லன்

வில்லன்

என் படத்தின் வில்லன் டோட்டா ராய் கிடையாது. நாங்கள் இன்னும் வில்லனை தேர்வு செய்யவே இல்லை என்று முருகதாஸ் கூறினார். தற்போது முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X