இது தான் உங்க டக்கா பக்தாஸ்: பாஜகவை கலாய்க்கும் குஷ்பு
Recommended Video

சென்னை: நான் ஒரு முஸ்லீம், நான் மதம் மாறவே இல்லை என்று பாஜகவினரை கலாய்த்துள்ளார் நடிகை குஷ்பு.
மெர்சல் விவகாரத்தின்போது நடிகர் விஜய் ஜோசப் விஜய் என்ற பெரிய விஷயத்தை பாஜக கண்டுபிடித்து தெரிவித்தது. மேலும் மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி கிறிஸ்தவரா என்பதை தெரிந்து கொள்ளவும் பாஜக முயற்சி செய்தது.
இந்நிலையில் இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறயிருப்பதாவது,
பெயர் மாற்றம்
ஹே பக்தாஸ்...உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது..என் பெயர் நக்கத் கான். என் பெயரை நான் மாற்றவில்லை...அதை நீங்கள் தற்போது கண்டுபிடித்தால் நீங்கள் ரொம்ப ஸ்லோ என்று சொல்ல வேண்டும்.
பக்தாஸ்
நான் ஒரு முஸ்லீம் என்று கூறும் பக்தாஸ்களே இந்த உலகத்திற்கே தெரியும் நான் ஒரு முஸ்லீம் என்றும், மதத்தை மாற்றவில்லை என்றும்...அதற்கு இப்பொழுது என்ன?
கான்
ஃபிலிம் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் என் பெயர் கான்...நக்கத் கான்...நான் தீவிரவாதி அல்ல மாறாக பெருமையான இந்தியன்..இந்தியா என் நாடு என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.
ஹேமா ருக்மணி
ஹேமா ருக்மணி கிறிஸ்தவரா என்று தெரிந்து கொள்ள விரும்பும் ஹெச். ராஜாவுக்கு, ஆமாம் அவர் கிறிஸ்தவர், இந்து, முஸ்லீம்...அவர் ஒரு இந்தியர். புரிந்ததா?


Click it and Unblock the Notifications











