சூர்யாவின் சூரரைப் போற்று செம ஹிட்.. அடுத்து 'பான் இந்தியா' படம்தான்.. சுதா கொங்கரா முடிவு!
சென்னை: சூரரைப் போற்று நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது, அடுத்து பான் இந்தியா முறையில் படம் இயக்க இருக்கிறேன் என்று இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சூர்யா நடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ளார்.
பரேஸ் ராவல், ஊர்வசி, மோகன்பாபு, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பட்ஜெட் விமானம்
இந்தப் படம் அமேசான் பிரைமில் கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. சாதாரண மக்களும் விமானப் பயணம் செய்வதற்காக பட்ஜெட் விமானப் போக்குவரத்தை துவக்கிய ஏர்டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம். படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பான் இந்தியா
ரசிகர்கள், சூர்யாவின் மாறா கேரக்டரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இயக்குனர் சுதா கொங்கராவையும் பாராட்டி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் சூர்யா மற்றும் இயக்குனர் சுதாவை கண்டபடி புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்து பான் இந்தியா முறையில் படம் இயக்கப் போவதாகக் கூறியுள்ளார் சுதா கொங்கரா.

த்ரில் ரிசல்ட்
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ரிலீஸுக்கு முன்பு சூர்யா, படம் பற்றிய நம்பிக்கையோடு சொன்னார், 'ரிசல்ட் பற்றிய கவலை எனக்கு இல்லை. இந்தப் படத்தில் நான் இருந்தேன் என்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது' என்று. அதே போல பட ரிலீசுக்குப் பிறகு கிடைத்த ரிசல்ட் உண்மையிலேயே த்ரில்லானது.

பெரிய ரெஸ்பான்ஸ்
'பத்து வருடத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்திருக்கும் பெரிய ரெஸ்பான்ஸ் இது என்று சொன்னார் சூர்யா. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, கேப்டன் கோபிநாத், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் வெங்கடேஷ் உள்பட பலர் பாராட்டினார்கள். ராணா, இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு கவுரவம் என்றார். அவர் தெலுங்கு பதிப்புக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

வெளியிட திட்டம்
எனது அடுத்த படம் பற்றி கேட்கிறார்கள். அது பான் இந்தியா படமாக இருக்கும். ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியில் உருவாக்கிவிட்டு அதை ஐந்து மொழிகளில் வெளியிட திட்டம். பணியாற்றுவதற்கு எனக்கு மொழி முக்கியம். தமிழ், தெலுங்கு எனக்கு நன்றாக தெரியும் என்பதால், இதில் பணியாற்றுவதையே விரும்புகிறேன். இவ்வாறு சுதா கொங்கரா கூறினார்.


Click it and Unblock the Notifications











