நடிகர் சங்க தேர்தல்: என் வேட்புமனு தள்ளுபடியா?- ரமேஷ் கண்ணா கொந்தளிப்பு

By Siva

சென்னை: என் வேட்புமனு தள்ளுபடி என்று வெளியான செய்தி வெறும் வதந்தி என்று நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை, அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் நடைபெற உள்ளது. 29 பதவிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் நாசர், விஷால் அடங்கிய பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறது.

My nomination is not rejected: Ramesh Khanna

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட 90 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 8ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை மனு தாக்கல் நடந்தது. இந்நிலையில் இன்று மனுக்களை சரி பார்த்தபோது பாக்யராஜ் அணியை சேர்ந்த நடிகர்கள் ரமேஷ் கண்ணா, விமல் மற்றும் நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

முறையாக சந்தா கட்டாத காரணத்தால் அந்த 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து ரமேஷ் கண்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நான் 48 ஆண்டுகளாக சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். என் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படவில்லை. அப்படி வெளியான தகவல் வெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுபவர் சங்கத்தில் குறைந்தது 7 ஆண்டுகளாவது உறுப்பினராக இருக்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் ஆண்டு சந்தா செலுத்தியிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறியதால் ரமேஷ் கண்ணா, விமல், ஆர்த்தி ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் 7 ஆண்டு என்ன நான் 48 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் ரமேஷ் கண்ணா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X