பெண்ணாக இருப்பது தான் நான் செய்த ஒரே தவறு: நடிகை ப்ரீத்தி ஜிந்தா
மும்பை: பெண்ணாக இருப்பது தான் நான் செய்த ஒரே தவறு என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியாவுக்கு எதிராக மும்பை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் வாடியாவுக்கு எதிராக போலீசாரிடம் வாக்குமூலமும் அளித்தார்.
இந்நிலையில் அவர் இது குறித்து ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

பொய்
இது வேண்டும் என்றே கொடுக்கப்பட்ட புகார் இல்லை. நான் பொய் சொன்னது இல்லை. அது எனக்கு வரவும் வராது. நான் ஒரு பொறுப்புள்ள குடிமகள்.

தவறு
பெண்ணாக இருப்பது தான் நான் செய்த ஒரே தவறு. வேலை செய்யும் இடத்தில் நெருக்கமாக இருந்த ஒருவரால் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு, மிரட்டப்பட்டு ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போனது.

வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறை தவறானது. ஆனால் அதை எதிர்த்து குரல் கொடுத்தால் ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுவதாக நம்மை தான் குறை கூறுவார்கள்.

குடும்பம்
நான் எனக்காக மட்டுமே போராடுகிறேன். இது ஒரு குடும்பத்திற்கு எதிரான போராட்டம் அல்ல தனி நபருக்கு எதிரானது.

மீடியா
நான் புகார் கொடுத்தது குறித்து அறிந்த மீடியா அதை பெரிதாக்கிவிட்டது. அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் என்ன பத்திரிக்கையாளர்களை சந்தித்தேனா? இல்லையே. நான் மக்கள் மற்றும் மீடியாவை என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளிக்குமாறு தான் கேட்டுக் கொண்டேன் என்று ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











