twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒவ்வொரு ஸ்டண்டுக்கும் ஸ்கிரிப்ட் எழுதுவேன்... புதிதாக கற்றுக்கொள்வேன் -ஸ்டண்ட் சில்வா

    |

    சென்னை: ரிஸ்க் எடுப்பது தான் வாழ்க்கை, ஆனால் எனது மருந்தியல் அறிவு எனது ஸ்ட்ண்ட் பாய்ஸ்களை அதிகம் ரிஸ்கில் மாட்டாமல் காப்பாற்றுகிறது. எப்பொழுதும் கற்றுகொண்டே இருங்கள். அது தான் வாழ்க்கையை உயர்த்தும். ஒவ்வொரு வருடமும் ஒரு புது விஷயத்தை கற்றுகொள்ளுங்கள். நான் ஓவ்வொரு முறை ஸ்டண்ட் எடுக்கும் பொழுதும் அதற்கு ஒரு ஸ்கிரிப்ட் எழுதி ஷாட் பிரித்து கொண்டு தான் ஸ்பாட்டுக்கு செல்வேன் என்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா.

    பரட்டை தலை மிரட்டும் விழி என திரியும் ஸ்டண்ட் மாஸ்டர்களும் ஸ்டண்ட் கலைஞர்களும் சினிமாவில் பார்த்தால் தான் அச்சம் தருவார்கள். நெருங்கி பார்க்கும் பொழுது தான் தெரியும், பால் குடிக்கும் பச்சிளம் குழந்தையை விட மிக மிக மென்மையான குழந்தை மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.

    My Pharmacological knowledge save my stunt boys-Stunt Silva

    அவர்களில் முக்கியமானவர் ஸ்டண்ட் சில்வா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழி திரைப்படங்களிலும் தன்னுடைய தனித்துவமான ஸ்டண்ட் காட்சிகளால், தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளவர் ஸ்டண்ட் சில்வா. இன்றைய முன்னனி நடிகர்களான அஜீத் மற்றும் விஜய்க்கு ரொம்ப பிடித்தமான ஸ்டண்ட் மாஸ்டர் என்றால் அது சில்வா தான்.

    மருத்துவமனையில் வார்டு பாயாக வாழ்க்கையை தொடங்கி கற்றலின் மீது இருக்கும் ஆர்வத்தினால் ரேடியோ டெக்னாலஜி கற்று அதே மருத்துவமனையில் தொழில்நுட்ப கலைஞனாக உயர்ந்து, மருந்தியல் வினியோகஸ்தராக வெற்றி நடைபோட்டு மேலும் கற்றலின் ஆர்வத்தினால் பாக்சிங், குங்குபூ, டான்ஸ் என தொடர்ந்து ஒரு சின்ன சம்பவம் வாழ்க்கையை மாற்ற இன்று எட்டு மொழிகளில் ஹாலிவுட் உட்பட முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் ஆக உயர்ந்திருக்கிறார்.

    ரிஸ்க் எடுப்பது தான் வாழ்க்கை, ஆனால் எனது மருந்தியல் அறிவு எனது ஸ்ட்ண்ட் பாய்ஸ்களை அதிகம் ரிஸ்கில் சிக்காமல் காப்பாற்றுகிறது. எப்பொழுதும் கற்றுகொண்டே இருங்கள். அது தான் வாழ்க்கையை உயர்த்தும். ஒவ்வொரு வருடமும் ஒரு புது விஷயத்தை கற்றுகொள்ளுங்கள் (இதுதான் எல்லா வாழ்வியல் பயிற்சியாளரும் சொல்வது).

    எப்பொழுதும் ஓட்ட பந்தயத்தில் தயாராக நிற்கும் ஓட்ட பந்தய வீரனை போல், அந்த துப்பாக்கி சத்தத்திற்காக காத்திருங்கள் இது தான் சில்வா மாஸ்டரின் பஞ்ச். ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் பொன்னியின் செல்வன். சாண்டில்யன், கல்கி, பாலகுமாரன் பற்றி அக்குவேறு ஆணிவேறாக பிரித்து இலக்கியம் பேசிப் பார்ப்பதும் இதுதான் முதல் முறை.

    நான் ஓவ்வொரு முறை ஸ்டண்ட் எடுக்கும் பொழுதும் அதற்கு ஒரு ஸ்கிரிப்ட் எழுதி ஷாட் பிரித்து கொண்டு தான் ஸ்பாட்டுக்கு செல்வேன் என்று சொல்லும் சில்வா. எப்படி ஒரு ஸ்டண்டுக்கு ஸ்கிர்ப்ட் எழுத வேண்டும் என்று அவர் வகுப்பெடுத்த விதம் அலாதி.

    English summary
    Risk-taking is life, but my Pharmacological knowledge saves my stunt boys too much risk. Always keep learning. It will only lift life. Learn a new thing every year. Stunt Silva shared his experiences: "Every time I do a stunt, I will write a script for it and split the shot."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X