சிம்புவுக்காக என் கதை வெயிட் பண்ணிட்டு இருக்கு!

சென்னை: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது

பிசாசு இரண்டில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி, பூர்ணா,சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் என பல முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்

இந்த நிலையில் மிக விரைவிலேயே சிம்புவை இயக்கவுள்ள மிஷ்கின் அது எந்த மாதிரியான கதை என்ற விளக்கத்தை அளித்துள்ளார்

ஜனரஞ்சகமான நல்ல படங்களை

ஜனரஞ்சகமான நல்ல படங்களை

வெற்றி படங்கள் கொடுக்க வேண்டுமென்றால் கமர்சியல் படங்கள் மட்டுமல்ல ஜனரஞ்சகமான நல்ல படங்களையும் வித்தியாசமான கதைகளை கொடுத்தால் மக்கள் வரவேற்பார்கள் கொண்டாடுவார்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்பதை நிரூபித்துள்ள காட்டியுள்ளார் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் தொடர்ந்து இயக்கிய அடுத்தடுத்த படங்களிலும் மிகவும் தனித்துவமான கதை களத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதே மாதிரி ஒரே மாதிரியான படங்களை இயக்காமல் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி இயக்கி வருகிறார்.

பேயை தேவதையாக

பேயை தேவதையாக

அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் மிகவும் புதுமையான ஹாரர் படமாக வெளியானது பிசாசு.

பொதுவாக பேய் படங்கள் என்றால் காட்சிக்கு காட்சி திகிலாக இருக்கும் மனிதர்களை பயமுறுத்தி கொல்லும் என சொல்லப்பட்டு வந்த சூழலில் பேய்களை நல்ல பேய்களாகவும் காட்டலாம் எனக்காட்டி முத்திரை பதித்து வெற்றி பெற்று காட்டியவர் இயக்குனர் மிஷ்கின். பேயை தேவதையாக காட்டியது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக பிசாசு படத்தை மாபெரும் வெற்றிப்படமாக ரசிகர்கள் கொண்டாடினர். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிசாசு மிகப்பெரிய வசூலை அள்ளியது இந்த நிலையில் பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தை மிஸ்கின் தற்போது இயக்கி வருகிறார்.

 சிம்புவை இயக்க

சிம்புவை இயக்க

பிசாசு இரண்டில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வர விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப், பூர்ணா,அஜ்மல் என பல முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இப்பொழுது தயாரித்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் மிஸ்கின் அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

சிம்புவுக்காக என் கதை வெயிட்டிங்

சிம்புவுக்காக என் கதை வெயிட்டிங்

மிஸ்கின் சிம்பு இணையும் புதிய படத்தைப் பற்றி தகவல்களை பகிர்ந்து மிஸ்கின் இப்படத்தின் கதையை சிம்புவிடம் கூறியபோது க்ளைமேக்ஸில் 100 பேரை சிம்பு அடிக்கிறார் என கூறியதும் சிம்புவுக்கு இந்த கதை மிகவும் பிடித்து விட்டது. சிம்புவுக்காக கதை வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கு.இருவரும் அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் பிஸியாக இருப்பதால் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக சிம்பு மற்றும் மிஸ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X