twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருது மீது எனக்கிருந்த பார்வை சூர்யாவுக்கு கிடைத்தவுடன் மாறிவிட்டது - சுதீப்

    |

    சென்னை: திரைப்படங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளிலேயே இந்திய அளவில் பெரிய விருதாக கருதப்படுவது தேசிய விருதுதான்.

    ஒரு பக்கம் தேசிய விருது வாங்குவதை பெருமையாகவும் அதை பலமுறை வென்றவர்களை பெருமைக்குரியவராகவும் பார்ப்பது வழக்கம்.

    சில சமயம் அந்த விருதின் மீது விமர்சனங்களும் விழும்.

    சீதா ராமம், லால் சிங் சத்தா கலெக்‌ஷன் ரிப்போர்ட்: வசூல் ரேஸில் வேகமெடுக்கும் 'விருமன்’ சீதா ராமம், லால் சிங் சத்தா கலெக்‌ஷன் ரிப்போர்ட்: வசூல் ரேஸில் வேகமெடுக்கும் 'விருமன்’

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    சென்ற ஆண்டு ஓடிடி-யில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், நடிகைக்கான விருது அபர்ணாவிற்கும் சிறந்த படத்திற்கான விருது சூரரைப் போற்று படத்திற்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது ஷாலினி மற்றும் சுதா கொங்காராவிற்கும் சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி. பிரகாஷ் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய விருதுகளும் சர்ச்சைகளும்

    தேசிய விருதுகளும் சர்ச்சைகளும்

    சில சமயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற தகுதி மிக்க நடிகர்களுக்கு கிடைக்காமல் பிற நடிகர்களுக்கு கிடைக்கும் போது அந்த விருது மீது விமர்சனங்களும் எழுந்தது உண்டு. ஆடுகளம் திரைப்படத்திற்கு ஆறு தேசிய விருதுகள் வழங்கப்பட்ட போது கூட பத்திரிகைகளில் விமர்சனங்கள் எழுந்தது. ஏன், இப்போது கூட சூரரைப் போற்று படத்திற்கு இத்தனை விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதிற்கும் விமர்சனங்கள் வருகின்றன. தேசிய விருதிற்கான தேர்வுக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்ற கோணத்தில் இருந்தே இது போன்ற விமர்சனங்கள் எழும்.

    சுதீப்பின் கருத்து

    சுதீப்பின் கருத்து

    இதுபோன்ற விமர்சனங்களை சினிமா துறையில் இருப்பவர்களே கூட சில சமயம் முன் வைப்பார்கள். அந்த வகையில் 'நான் ஈ' திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் சுதீப் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். வழக்கமாக தேசிய விருதுகள் சிலருக்கு அறிவிக்கப்படும் போது இந்த படத்திற்கு தேசிய விருதா இந்த நடிகருக்கு தேசிய விருதா என்று தான் ஆச்சரியப்பட்டுள்ளதாகவும், அப்போதெல்லாம் அந்த விருதின் மீது தனக்கு விமர்சனம் இருந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் இம்முறை சூரரைப் போற்று படத்திற்காகவும் சூர்யாவிற்காகவும் விருதுகள் அறிவிக்கப்பட்ட போது சரியான நபருக்குத்தான் தேசிய விருது அறிவித்திருக்கரார்கள் என்று தனக்கு தோன்றியதாக சுதீப் கூறியுள்ளார்.

    Recommended Video

    மனைவி Nayanthara-வுடன் வெளிநாடு பறந்த Wikki...எங்கு தெரியுமா? *Kollywood
    இருவரும் ஒன்றாக நடித்த படம்

    இருவரும் ஒன்றாக நடித்த படம்

    சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பிரமாதமாக இருந்ததாகவும், நடிப்பு நடிகன் என்பதைத் தாண்டி சூர்யாவின் மேடைப் பேச்சுக்கள், தனி மனித நடவடிக்கைகள் எல்லாம் தன்னை ஆச்சரியப்படுத்துவதாகவும் சுதீப் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து 2010 ஆம் ஆண்டு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் தெலுங்கில் உருவான இரத்தச் சரித்திரா என்கிற படத்தில் ஒன்றாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    My view on the National Award changed when Suriya got it Says Kannada Actor Sudeep
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X