twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஞ்சாவை துளசியுடன் ஒப்பிட்ட விவகாரம்.. மருத்துவ இலக்கியங்கள் ஆதாரம்.. நடிகை மீண்டும் விளக்கம்!

    By
    |

    பெங்களூரு: கஞ்சாவை துளசியுடன் ஒப்பிட்ட விவகாரத்தில், மருத்துவ இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டுதான் சொன்னேன் என்று கூறியுள்ளார் நடிகை நிவேதிதா.

    கிஷோர் நடித்த போர்க்களம், அபிஷேக் இயக்கிய கதை, ஃபெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2 உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் நிவேதிதா.

    கன்னட நடிகையான இவர், கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.

     நயன்தாரா பாணியில் சிம்பு செய்த வேலை.. எல்லாம் அதுக்காகத்தானாம்.. வைரலாகும் தகவல்.. ரசிகர்கள் குஷி! நயன்தாரா பாணியில் சிம்பு செய்த வேலை.. எல்லாம் அதுக்காகத்தானாம்.. வைரலாகும் தகவல்.. ரசிகர்கள் குஷி!

    ராகிணி திவிவேதி

    ராகிணி திவிவேதி

    போதை மாத்திரைகளை பயன்படுத்திய விவகாரத்தில், நடிகை ராகிணி திவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுபற்றி கருத்துக் கூறிய நடிகை நிவேதிதா, கஞ்சா மருத்துவக் குணம் நிறைந்தது என்றும் அதைச் சட்டப் பூர்வமாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    சிகிச்சைக்கு கஞ்சா

    சிகிச்சைக்கு கஞ்சா

    ஏற்கனவே போதைப் பொருள் குறித்த வழக்கு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், நடிகை நிவேதிகா இப்படி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கஞ்சா பற்றி அவர் கூறும்போது, 'தடை செய்யப்படுவதற்கு முன், பல்வேறு சிகிச்சைகளுக்கு கஞ்சாவைப் பயன்படுத்தி வந்தனர். கஞ்சாவை தடை செய்ததற்குப் பின்னால் சதி இருக்கிறது. சுமார் 40 நாடுகளில் இதைப் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தி வருகின்றனர் ' என்று தெரிவித்தார்.

    எப்படி ஒப்பிடலாம்?

    எப்படி ஒப்பிடலாம்?

    இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. பலர் அவரை சரமாரியாக விளாசினர். கஞ்சாவுடன் புனிதமான துளசியை எப்படி ஒப்பிடலாம் என்றும் இதன் மூலம் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகவும் கூறி, மல்லேஸ்வரத்தை சேர்ந்த தீபக் என்பவர் போலீசில் நிவேதிதா மீது புகார் கொடுத்தார்.

    ஆதாரப்பூர்வமாக

    ஆதாரப்பூர்வமாக

    இந்நிலையில் தான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று நடிகை நிவேதிதா கூறியுள்ளார். 'எனது டிவி பேட்டியில் சில பகுதிகளை மட்டுமே வெட்டி சமூக வலை தளங்களில் ஒளிபரப்பியதால் வந்த பிரச்னை அது. போலீசார் இந்த விவகாரம் குறித்து என்னிடம் விசாரித்தனர். நான் விளக்கினேன்.

    Recommended Video

    மிரட்டும் கொரோனா.. கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய லயோலா கல்லூரி மாணவர்கள்!
    மருத்துவ இலக்கியங்கள்

    மருத்துவ இலக்கியங்கள்

    எனது கருத்து, பண்டை கால இலக்கியங்களில் உள்ள ஆன்மீக ஆவணங்கள் மற்றும் மருத்துவ இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதால், என் நிலைப்பாட்டை ஆதாரத்துடன் விளக்கினேன். மேலும் அது என் தனிப்பட்ட கருத்தும் அல்ல, நான் மேற்கோளைதான் காட்டி இருக்கிறேன். இதில் எந்த மத உணர்வையும் புண்படுத்தவில்லை. நானும் அதே மதத்தைதான் பின்பற்றுகிறேன்' என்று கூறியுள்ளார் நிவேதிதா.

    English summary
    Actress Niveditha says, My views on cannabis were presented out of context
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X