என் Wife தான் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்... மனம் திறந்த விஜய் ஆண்டனி!

சென்னை: இசையமைப்பாளராக இருந்து இப்பொழுது நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டுள்ளவர் நடிகர் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் என் வாழ்க்கையில் பெஸ்ட் ஃபிரெண்ட் என்னுடைய மனைவி தான் என மனம் திறந்து கூறியுள்ளார்

 புதுவிதமான வரிகளில்

புதுவிதமான வரிகளில்

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பல தடைகளைக் கடந்து அதன் பிறகு ஒவ்வொரு படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. குறிப்பாக விஜய் ஆண்டனி பாடல்கள் அனைத்தும் புதுவிதமான வரிகளில் புதுவிதமான இசையுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றது. குறிப்பாக நாக்க முக்க பாடல் இன்றுவரை இந்திய அளவில் மிகப் பிரபலமான கேட்டவுடனேயே அனைவரும் குத்தாட்டம் போடும் பாடலாக இருந்து வருகிறது. குத்து பாடல்கள் மட்டுமல்லாமல் மெலடி பாடல்களையும் கொடுத்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்

 ஹீரோவாக அறிமுகம்

ஹீரோவாக அறிமுகம்

முதல் படத்திலேயே அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி அதைத் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அது தரமானதாக இருக்கும் என மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியானது குறிப்பாக த்ரில்லர் கதைகளை விஜய் ஆண்டனி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

 பிச்சைக்காரன் -2

பிச்சைக்காரன் -2

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டது தமிழை விடவும் தெலுங்கில் இப்படத்திற்கு இரண்டு மடங்கு வரவேற்பு கிடைத்தது. பிச்சைக்காரன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை தொடர்ந்து பிச்சைக்காரன் பாகம்-2 தற்போது உருவாகி வருகிறது முதலில் பாரம் பட இயக்குனர் பிரியா கிருஷ்ணன் இயக்குகிறார் என கூறப்பட்டது . பின் பிரியா கிருஷ்ணன் விலக விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்தும் வருகிறார்.

 மனைவி தான்

மனைவி தான்

இசையமைப்பாளர், நடிகர், படத்தொகுப்பாளர், இயக்குனர் என திரைத்துறையில் பல அவதாரங்களை எடுத்து வரும் விஜய் ஆண்டனி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உங்க பெஸ்ட் ஃபிரண்ட் யார் என கேட்டதற்கு சற்றும் தாமதிக்காமல் மனைவி தான் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட் என கூறியுள்ளார். விஜய் ஆண்டனி இப்பொழுது அக்னி சிறகுகள், கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X