twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு பொருத்தமான ஒரே ஹீரோயின் என் மனைவிதான்: பாண்டியராஜன்

    |

    சென்னை: 'எனக்கு பொருத்தமான ஒரே ஹீரோயின் என் மனைவிதான், என் சட்டையை பார்த்தாலே தெரியுமே நான் இன்னும் இள்மையாகத்தான் இருக்கிறேன் என்று' என நடிகர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    பாண்டியராஜன், நளினி, மயில்சாமி ஆகியோருடன் அறிமுக நாயகன் ரோஷன், அறிமுக நாயகி சாதனா நடித்துள்ள திரைப்படம் 'சத்திரம் பேருந்து நிலையம்.'

    மதுக்கடை ஒன்றை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள ஒரு காதல் கதைதான் இந்த படத்தின் கதைக்கரு. திருச்சி மாநகரின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், சென்னையில் இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பாண்டியராஜன் பேசியதாவது:-

    தண்ணீ தொட்டி தேடி வந்த...

    தண்ணீ தொட்டி தேடி வந்த...

    இப்படத்தின் கதை ஒரு மதுக்கடையை சார்ந்துள்ளது. அதனால் காட்சிகளின் நடித்திருக்கும் நானோ, மயில்சாமியோ தள்ளாட்டத்திலேயே இருப்போம். இந்தக் கதையை கேட்கும்பொழுது மதுவோடு இருப்பதுபோன்ற காட்சிகள் தான் வரும் என்று நானும் சற்று யோசித்தேன்.

    பாடி ஸ்ட்ராங்... ஆனா பேஸ்மெண்ட் வீக்கு...

    பாடி ஸ்ட்ராங்... ஆனா பேஸ்மெண்ட் வீக்கு...

    என்னைவிட மயில்சாமி பெரும் தள்ளாட்டத்துடன் இருந்திருப்பதை பார்க்கும்போது எனது காட்சிகள் பரவாயில்லைனு தோணுது.

    நானா சீனியர்...?

    நானா சீனியர்...?

    காமகோடியன் பேசும்போது, ‘என்னைவிட பாண்டியராஜன் சீனியர்' என்று குறிப்பிட்டார். அவரையும் என்னையும் பார்த்தால் யார் சீனியர் என்பது தெரியும். 23 வயதில் இயக்குனர் ஆனது, என் தவறல்ல. இதனால், என்னை சீனியர் என்று அழைக்கிறார்கள்.

    இளமை... இதோ.. இதோ...

    இளமை... இதோ.. இதோ...

    பொதுவாக என் வீட்டைப்பற்றி என் குழந்தைகளைப் பற்றி விசாரித்தால்தான் யோசிக்கத் தோன்றுகிறது. என் சட்டையைப் பார்த்தாலே தெரியும். இது என் பசங்களுக்கு வாங்கிய சட்டை. எல்லோருக்கும் ஒரே சைஸ்தான்.

    மனைவி ஒரு மாணிக்கம்...

    மனைவி ஒரு மாணிக்கம்...

    எனக்கு பொருத்தமான ஹீரோயின்னா... அது என் மனைவிதான்.

    கனவுத்தொழிற்சாலை...

    கனவுத்தொழிற்சாலை...

    சினிமாவில் எல்லோருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அது அவர்களின உழைப்பைப் பொருத்துதான் நிறைவேறும். அந்த வகையில் இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது.

    ஒரு நாயகன் உதயமாகிறான்...

    ஒரு நாயகன் உதயமாகிறான்...

    இப்படத்தின் நாயகன் ரோஷன் ஒரு மேடை நடிகர். இதுபோன்ற கலைஞர்கள் சினிமாத் துறைக்கு வருவது ஆரோக்கியமானது. இப்படத்தின் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளன.

    ஓம்... சிவோகம் காட்சி...

    ஓம்... சிவோகம் காட்சி...

    சுடுகாட்டில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்' , இவ்வாறு அவர் பேசினார்.

    English summary
    At a press conference by the 'chthiram pearunthu nilayam' movie team the popular comedy hero and director Pandiarajan said, " Evennow I feel very young. Mywife is my best heroine".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X