“ராக்கெட்ரி“படம் பார்த்து வாயடைத்துவிட்டேன்.. நெகிழ்ந்த மயில்சாமி அண்ணாதுரை!
சென்னை : நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை பார்த்து வாயடைத்துவிட்டதாக மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
Recommended Video
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. 80 வயதான நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார்.
பான் இந்திய திரைப்படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் ஜூன் 1ந் தேதி இத்திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

நடிகர் மாதவன்
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமில்லாமல் பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான 'அலைபாயுதே' என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்
நடிகர் மாதவன், இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். 60 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போது. இதுவரை 15 கோடி ருபாய் மட்டுமே வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் படத்திற்கு எதிர்பார்த்த வசூலை பெற்றுத்தரவில்லை கூறப்படுகிறது.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
இந்நிலையில், இத்திரைப்படத்தை பார்த்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தை பார்த்து தனது கருத்தை சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ராக்கெட்ரி நம்பி விளைவு: எங்களை சிறிது நேரம் வாயடைக்க செய்துவிட்டது. இஸ்ரோவில் மீண்டும் வாழ்ந்தது போல் உணர்ந்தேன். இது வெறும் திரைப்படம் அல்ல, ஒரு வரலாற்று சாதனை, திரையில் ஒரு காவியம் என குறிப்பிட்டுள்ளார்.

தலை வணங்குகிறேன்
மேலும், நம்பி நாராயணன் பாதிக்கப்பட்ட போது எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படக்கூடாது. நம்பி நாராயணன் அவர்களின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் இந்த படத்தின் மூலம் மக்கள் தெரிந்து கொண்டார்கள். திரு. நம்பி நாராயணனுக்காக இந்த மகத்தான பணியை செய்ததற்காக மாதவனுக்கு நான் தலை வணங்குகிறேன். அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று மயில்சாமி அண்ணாதுரை நெகிழ்ந்து பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











