அந்த மைனா வருவாங்கன்னு நினைச்சா.. இந்த மைனா வரப் போறாங்களாம்.. பிக் பாஸ் சீசன் 6 அப்டேட்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவருக்கு இன்னொரு மனைவியாக நடித்த பிரபல சின்னத்திரை நடிகை இப்போ பிக் பாஸ் சீசன் 6க்கு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை அமலா பால் வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அந்த மைனா வரவில்லை இந்த மைனா தான் வரப் போகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றன.

பிக் பாஸ் ஆரம்ப தேதி

பிக் பாஸ் ஆரம்ப தேதி

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வரும் அக்டோபர் 9ம் தேதி கோலாகலமாக மாலை 6 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என கமல்ஹாசனின் புதிய புரமோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறையும் ஏகப்பட்ட விஜய் டிவி பிரபலங்களே பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு போட்டியாளரும் இந்த முறை பங்கேற்க போகிறார்.

24 மணி நேரம்

24 மணி நேரம்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போல பிக்பாஸ் சீசன் 6ம் 24 மணி நேரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. ரசிகர்கள் எதை சரியாக ஃபாலோ செய்வார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய் டிவியில் இரவு 10 முதல் 11 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியை பார்ப்பார்களா? அல்லது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தொடர்ந்து பார்க்கப் போகிறார்களா? என்பது பெரிய கேள்வியாக உருவாகி உள்ளது.

ஓடிடிக்கு லாபம்

ஓடிடிக்கு லாபம்

24 மணி நேரமும் ஸ்ட்ரீமிங் ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு மேலும் சப்ஸ்கிரைபர்கள் அதிகரிப்பார்கள். அதிக நேரம் அந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆன்லைனில் பார்த்தல் ஓடிடிக்கு அது பெத்த லாபம் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால், அதே சமயம் ஷோ மீதான எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமும் குறைந்து போகும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த மைனா வரல

அந்த மைனா வரல

கடாவர் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட்டு கடந்த சீசன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகனின் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் க்யூட்டா கலந்து கொண்ட அமலா பால் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாலத்தீவில் தொடர்ந்து ஜாலி டூர் அடித்து பிகினி போட்டோக்களாக போட்டுத் தாக்கி வருகிறார். இந்நிலையில், அந்த மைனா வரவில்லை என்றால் என்ன இந்த மைனா வராங்க என புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

மைனா நந்தினி

மைனா நந்தினி

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒரு மனைவியாக நடித்திருந்த மைனா நந்தினி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்த மைனா நந்தினி நடித்துள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளை, விருமன் என ஏகப்பட்ட படங்களிலும் நடித்துள்ளார் மைனா நந்தினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X