பிக் பாஸ் 3 வீட்டில் மைனா, ப்ரியங்கா அக்காவா?

By Siva

Recommended Video

Bigg Boss 3 Contestants: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் மைனா,ப்ரியங்கா?.. சமூக வலைதளங்களில் வைரல்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான மைனா நந்தினி, ப்ரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. முதல் இரண்டு சீசன்களை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸனே தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 மைனா நந்தினி

மைனா நந்தினி

பிக் பாஸ் 3 வீட்டிற்கு ஜாங்கிரி மதுமிதா செல்வது மட்டுமே உறுதியாகியுள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தொடர் புகழ் மைனா நந்தினியும், நம்ம ப்ரியங்கா அக்காவும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. ப்ரியங்கா அக்காவை பிக் பாஸ் சேரில் அமரவைத்துவிட்டார்கள் நெட்டிசன்கள்.

 ஆர்வம்

ஆர்வம்

என்ன மைனா, பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, இதுவரை யாரும் என்னை அழைக்கவில்லை. ஆனால் அழைத்தால் நிச்சயம் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வேன் என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் ஏற்பாட்டாளர்களே, மைனா ரெடி, நீங்க ரெடியா?

வாழ்த்து

வாழ்த்து

காதலித்து திருமணம் செய்து கொண்ட மைனா நந்தினியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அதனால் மனமுடைந்து போன அவர் அதில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணம் நிலைத்து நின்று அவர் சந்தோஷமாக வாழட்டும் என்று ரசிகர்கள் மனதார வாழ்த்துகிறார்கள்.

 ப்ரியங்கா தேஷ்பாண்டே

ப்ரியங்கா தேஷ்பாண்டே

பிக் பாஸ் போட்டியாளர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை அவர் போகிறார், இவர் போகிறார் என்று பேச்சு கிளம்புவது வழக்கமான ஒன்று. நிகழ்ச்சி தொகுப்பாளரான ப்ரியங்கா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் செம என்டர்டெயின்மென்டாக இருக்கும். ஆனால் அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அக்கா, பிக் பாஸ் வீட்டிற்கு வாங்கக்கா என்று ரசிகர்கள் அழைப்பு விடுத்தால் மட்டும் போதுமா?. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைக்க வேண்டும், ப்ரியங்கா ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி நிறைய விஷயம் உள்ளதே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X