என்ன பொண்ணுடா இவ.. மலைப்பாம்புடன் போஸ் கொடுத்த மைனா நந்தினி.. தெறித்து ஓடிய பேன்ஸ்!
சென்னை: நடிகை மைனா நந்தினி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோவை பார்த்து ரசிகர்கள் மிரட்டு தெறிந்து ஓடினார்கள்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் மைனா நந்தினி. இந்த தொடரில் இவர் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால், மைனா என்ற பெயர் இவருடன் ஒட்டிக்கொண்டது.

நடிகை மைனா நந்தினி: சின்னத்திரை சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து ஜீ தமிழ் நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, கலக்கப் போவது யாரு, பிக்பாஸ் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று சிறப்பான செயல்பாட்டை அளித்தார்.
பிக் பாஸ் வீட்டில்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் 104 நாட்கள் இவர் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்தார். இவரது அடுத்தடுத்த வீடியோக்கள், ரீல்ஸ், சுற்றுலா புகைப்படங்கள் ஆகியவற்றால் கவரப்பட்டு இவரை 7.4 மில்லியன் பாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர். அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.
என்ன பொண்ணுடா இவ: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி மலைப்பாம்பை தோளில் போட்டுக்கொண்டு செம தில்லாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், என்ன பொண்ணுடா இவ என்றும், பயமா இல்லையா… என்ன தைரியம் என்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
காதல் திருமணம்: மைனா நந்தினிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த யோகேஸ்வரன் என்ற சீரியல் நடிகரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது துருவன் என்ற மகன் உள்ளார்.


Click it and Unblock the Notifications











