லோகேஷ் கனகராஜுடன் செல்ஃபி.. ’விக்ரம்’ படத்தில் கமீட் ஆனதை கன்ஃபார்ம் பண்ண மைனா நந்தினி!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் நரேன் வில்லன்களாக மிரட்ட உள்ளனர்.

இந்நிலையில், மைனா நந்தினி லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த செல்ஃபியை ஷேர் செய்து அவரது படத்தில் நடிக்கப் போகிறேன் என்பதை உறுதி செய்துள்ளார்.

குருவை இயக்கும் சிஷ்யன்

குருவை இயக்கும் சிஷ்யன்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மானசீக குரு என்றால் அது நடிகர் கமல்ஹாசன் தான். மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

காரைக்குடியில் படப்பிடிப்பு

காரைக்குடியில் படப்பிடிப்பு

விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஆண்ட்ரியா, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், காரைக்குடியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

2 பொண்டாட்டி ஒரு காதலி

2 பொண்டாட்டி ஒரு காதலி

முதலில் இந்த படத்தில் யாருக்குமே ஜோடி இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகர் விஜய்சேதுபதிக்கு 3 ஜோடி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதில், இரண்டு பொண்டாட்டி ஒரு காதலி என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பிக் பாஸ் ஷிவானி

பிக் பாஸ் ஷிவானி

மைனா நந்தினி மற்றும் விஜே மகேஷ்வரி இருவரும் விஜய்சேதுபதிக்கு மனைவிகளாகவும் அந்த ஒரு காதலியாக பிக் பாஸ் ஷிவானியும் நடித்து வருவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு வெயிட்டேஜ் ஏற்றுகிறார் லோகேஷ் கனகராஜ் என்கிற கேள்வியும் உருவாகி உள்ளது.

உறுதி செய்த மைனா

உறுதி செய்த மைனா

இதெல்லாம் உண்மையா? இல்லை வதந்தியா என தெரியாமல் குழம்பித் தவித்த ரசிகர்களை தெளிவுப்படுத்தும் விதமாக நடிகை மைனா நந்தினி லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த செல்ஃபியை ஷேர் செய்து நானும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கப் போகிறேன் என்பதை உறுதி செய்துள்ளார்.

குவிகிறது வாழ்த்துக்கள்

குவிகிறது வாழ்த்துக்கள்

உங்கள் திறமைக்கு நிச்சயம் இப்படியொரு பெரிய வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அக்கா என ஏகப்பட்ட மைனா நந்தினி ரசிகர்கள் அவர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். சின்னத்திரையில் கலக்கி வரும் மைனா நந்தினி வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்கார துரை, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மீண்டும் விஜய்சேதுபதியுடன்

மீண்டும் விஜய்சேதுபதியுடன்

இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம், வெற்றிமாறன், ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, கெளதம் மேனன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்கள் இணைந்து சமீபத்தில் தொடங்கிய ரெயின் ஆன் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகவுள்ள முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில், அந்த படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அந்த படத்தில் ஹீரோவாக விஜய்சேதுபதி தான் நடிக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X