“அடுத்த ஜென்மத்திலேயும்”.. தம்பி பற்றி உருக்கமான டான்ஸ் வீடியோ வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!

தனது திருமண நிகழ்வின் போது தனது தம்பி நடனமாடிய உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை நடிகை மைனா நந்தினி வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Aww! Myna Nandhini share one video her instagram

சென்னை: நடிகை மைனா நந்தினி தனது தம்பி பற்றி உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா எனும் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்த கதாபாத்திரம் பெரிய ஹிட்டானதால் அவருடைய பெயரே மைனா நந்தினி என மாறிவிட்டது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'நம்ம வீட்டு பிள்ளை' உள்பட நிறைய படங்களிலும் மைனா நந்தினி நடித்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'அரண்மனை கிளி' தொடரில் நந்தினி நடித்து வருகிறார்.

மைனா நந்தினி திருமணம்

மைனா நந்தினி திருமணம்

மைனா நந்தினி, நடிகர் யோகேஸ்வரனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இது அவருக்கு இரண்டாவது திருமணமாகும். அவருடைய முதல் கணவர் கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பியின் நடன வீடியோ

இந்நிலையில் மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், அவரது தம்பி பாலு, "ரத்தத்தின் ரத்தமே இனிய உடன்பிறப்பே", நடனமாடி அசத்துகிறார். அதை பார்த்து நந்தினி ஆனந்த கண்ணீருடன், தம்பியை கட்டித்தழுவுகிறார்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

உணர்ச்சிகரமான இந்த வீடியோவை பதிவிட்டு, "மிகவும் உணர்ச்சிகரமான தருணம். என்னுடைய தம்பி எனது உயிர் மற்றும் எல்லாமே. இப்படி ஒரு தம்பி கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்கூடவே நான் பிறக்கணும் பாலு", என குறிபிட்டுள்ளார்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

உணர்ச்சிகரமான இந்த வீடியோவை பதிவிட்டு, "மிகவும் உணர்ச்சிகரமான தருணம். என்னுடைய தம்பி எனது உயிர் மற்றும் எல்லாமே. இப்படி ஒரு தம்பி கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்கூடவே நான் பிறக்கணும் பாலு", என குறிபிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கண்ணீர்

நெட்டிசன்கள் கண்ணீர்

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், மைனா நந்தினியையும்., அவருடைய தம்பியையும் வாழ்த்தி வருகின்றனர். தங்களுக்கும் கண்களில் வியர்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் மைனா நந்தினி கொடுத்து வைத்தவர் தான் என அவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X