Don't Miss!
- News
"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங்
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
இது நம்ம வாழ்க்கை.. நாம தான் டிசைட் பண்ணனும்.. வெற்றி மேடையில் பஞ்ச் பேசிய மைனா நந்தினி!
சென்னை: பணமூட்டையுடன் கதிர் சென்ற நிலையில், மீண்டும் ஒரு பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே கடந்த சீசனை போலவே பட்டாசு மேடையில் நிற்க வைத்து போட்டியாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது பிக் பாஸ் டீம்.
அமுதவாணன், மைனா நந்தினி உள்ளிட்ட போட்டியாளர்களின் கடந்து வந்த பாதையை காட்டி விஜய் டிவி பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர்.
கதிரை தொடர்ந்து ஷிவின் அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டாரா மைனா நந்தினி இந்த ஸ்டேஜில் இருக்காரே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மம்முட்டியின்
மாஸ்டர்
பீஸ்
சினிமா...
நண்பகல்
நேரத்து
மயக்கம்
ட்விட்டர்
விமர்சனம்

பிக் பாஸ் ஃபைனலிஸ்ட்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது. இந்த முறை டைட்டிலை யார் தட்டிச் செல்வார் என்கிற எதிர்பார்ப்பு பெருமளவில் எழுந்துள்ளது. அரசியல், பிஆர் என வெளியில் இருந்து அதிக அழுத்தம் நிகழ்ச்சியை எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கெடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. ஆனால், இதெல்லாம் தெரியாமல் உள்ளே ஜாலியாக தங்கள் வெற்றி பயணத்தை போட்டியாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் டிவி நபர்களுக்கு முன்னுரிமை
அமுதவாணனுக்கு டிக்கெட் டு ஃபினாலே கொடுத்து முதலில் உள்ளே அனுப்பிய நிலையில், பிக் பாஸ் பயண வீடியோவும் வெற்றி மேடையில் ஏறி நிற்கும் வாய்ப்பும் அமுதவாணனுக்கு முதலில் வழங்கப்பட்ட ப்ரோமோ வெளியானது. 2வது ப்ரோமோவில் மற்றொரு விஜய் டிவி ப்ராடக்ட் ஆன மைனா நந்தினி வெற்றி மேடையில் நிற்கும் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பணத்தை எடுத்தாரா ஷிவின்
மைனா நந்தினி இந்த மேடையில் ஏறி நிற்கும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில், பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷிவின் வெளியேறி விட்டாரா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. கதிரை தொடர்ந்து ஷிவினுக்கும் பணப்பெட்டியை கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்களா? என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. ஷிவின் பணத்துடன் சென்றாலும் நல்ல விஷயம் தான் எப்படியோ டைட்டில் கொடுக்க மாட்டாங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மைனாவின் பஞ்ச்
மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்காதீங்க, 4 பேரு பேசுறத கேட்டா நாம வாழ முடியாது. இது நம்ம வாழ்க்கை, நாம தான் டிசைட் பண்ணனும் எப்படி வாழணும்னு என மைனா நந்தினி பேச சிறகடித்து பறக்க வாழ்த்துக்கள் மைனா என பிக் பாஸும் மைனாவின் பயண வீடியோவை போட்டுக் காட்டி வாழ்த்திய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

என்னென்ன சொல்றா பாருங்க
மைனா நந்தினி தகுதியில்லாத ஃபைனலிஸ்ட் என்றும் விஜய் டிவி பண்ணும் மோசடி இது என்று ரசிகர்கள் இந்த ப்ரோமோவை பார்த்து கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், மைனாவின் பஞ்ச் ஸ்பீச்சை கேட்ட ரசிகர்கள் என்ன என்ன சொல்றா பாருங்க என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.