லைவ் நிகழ்ச்சியில் மனைவியை திட்டிய பிரபலம்.. என்ன இப்படி திட்டறாரு!

சென்னை : சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நந்தினி.

இவருடைய முதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், நந்தினி யோகேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

மைனா விங்ஸ் என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலில் இவர் பதிவிடும் காமெடி வீடியோக்கள் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகின்றன.

மைனாவாக வரவேற்பு பெற்ற நந்தினி

மைனாவாக வரவேற்பு பெற்ற நந்தினி

சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நந்தினி. ரசிகர்களுக்கு இவரது இயற்பெயரே தெரியாத அளவிற்கு மைனா கேரக்டர் மிகவும் பிரபலம். இந்த சீரியல் இவரை சின்னத்திரையில் மிகவும் பிரபலம் ஆக்கியது. தொடர்ந்து இவர் திரையிலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

யோகேஷை திருமணம் செய்த மைனா

யோகேஷை திருமணம் செய்த மைனா

அவரது முதல் கணவர் தற்கொலை செய்த நிலையில், ஏராளமான பிரச்சினைகளை சந்தித்தார் நந்தினி. தொடர்ந்து அதிலிருந்து மீண்டு, யோகேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு துருவன் என்ற மகன் உள்ளான். மைனா விங்ஸ் என்ற யூடியூப் சேனலையும் மைனா நடத்தி வருகிறார்.

காமெடி வீடியோக்கள்

காமெடி வீடியோக்கள்

இந்த சேனலில் காமெடி வீடியோக்களை இவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை இந்த ஜோடி பிடித்துள்ளது. இதையடுத்து இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

லைவில் திட்டிய யோகேஷ்

லைவில் திட்டிய யோகேஷ்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆங்கராகவும் இவர் கலக்கி வருகிறார். இவர்களை விஜே அர்ச்சனா பேட்டியெடுத்த வீடியோ ஒன்று தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ட்ரெண்டாகி வருகிறது. இதில் மைனா நந்தினியை அவரது கணவர் யோகேஷ் அறிவிருக்கா என்று நேரலையில் திட்டுகிறார்.

பதற்றமடையும் அர்ச்சனா

பதற்றமடையும் அர்ச்சனா

இதனால் அர்ச்சனா பதற்றமடைகிறார். தொடர்ந்து மைனா -யோகேஷ் வாக்குவாதம் செய்ய கேமராவை ஆப் செய்ய சொல்கிறார் அர்ச்சனா. இதனிடையே குழந்தைக்கு டயபர் மாற்றாமல் வந்தததாக யோகேஷ் முடிக்கிறார். இதையடுத்தே இது ப்ராங்க் என்பது அர்ச்சனாவிற்கு தெரியவருகிறது.

பிராங்க் வீடியோ

பிராங்க் வீடியோ

தொடர்ந்து அவர்களை அடிக்க பாய்கிறார் அர்ச்சனா. இவ்வாறு இந்த வீடியோ செல்கிறது. கடந்த மாதத்தில் வெளியாகி மிகுந்த வைரலான இந்த வீடியோ தற்போது மீண்டும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X