ஸ்ருதி இல்லைன்னா என்ன, ஆண்ட்ரியா இருக்காங்க.. அந்த பேய் கதையை கையில் எடுத்த இயக்குனர் மிஷ்கின்!
சென்னை: சைக்கோ படத்தைத் தொடர்ந்து, பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன் உட்பட பல படங்களை இயக்கியவர் மிஷ்கின்.இவர்,
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடித்த சைக்கோ படத்தை இயக்கி இருந்தார்.

துப்பறிவாளன் 2
கடந்த வருடம் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார். விஷாலுக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, அந்த படத்தில் இருந்து விலகினார் மிஷ்கின். பின்னர் அந்தப் படத்தை விஷாலே இயக்கப் போவதாக செய்திகள் வெளியாயின.

ஹாரார் கதை
இதையடுத்து அவர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த நேரத்தில் கொரோனா வந்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் கொரோனாவுக்காக குறுகிய காலத்தில் ஒரு படத்தை எடுக்க முடிக்கத் திட்டமிட்டார். இதற்காக ஹாரர் கதை ஒன்றை உருவாக்கினார்.

ஸ்ருதி ஹாசன்
இதில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனிடம் பேசி இருந்தார். அவர் தெலுங்கு படத்தில் பிசியாக இருந்ததால் இதில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வேறு சில நடிகைகளை தேடி வந்த மிஷ்கின், இப்போது ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்தில் சைக்கோ படத்தில் நடித்த ராஜ்குமார் பிச்சுமணி முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

பிசாசு 2 ஆம் பாகம்
இந்தப் பட பற்றி 20 ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். அதாவது நாளை அவர் பிறந்த தினம். அன்று '00:00 am'மணிக்கு அறிவிக்கிறார். இது பிசாசு படத்தின் அடுத்த பாகம் என்று கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தில் நாகா, பிரயாகா மார்டின், ராதாரவி உள்பட பலர் நடித்திருந்தனர். இயக்குனர் பாலா தயாரித்திருந்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றிருந்தது.


Click it and Unblock the Notifications











