twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டைட்டிலை மாத்துங்க... உதயநிதி படத்துக்கு இப்படியொரு சிக்கலா?

    By
    |

    சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள சைக்கோ படத்தின் டைட்டிலை மாற்ற சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம், சைக்கோ. மிஷ்கின் இயக்குகிறார். உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார். அதிதி ராவ், நித்யா மேனன், ராம், சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர்.

    Mysskin approaches revising committee over the title of his film

    மிஷ்கினின், நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இதில் உதயநிதி, பார்வையற்றவராக நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிளான 'உன்ன நெனச்சு'பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டிலுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்தப் படத்தை, கடந்த சில நாட்களுக்கு முன் சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். வழக்கமாக,
    படத்தில் வரும் சர்ச்சைக்குரிய வசனங்கள், வன்முறை காட்சிகள் போன்றவற்றை நீக்கத்தான் சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தின் டைட்டிலை மாற்றுமாறு கூறியுள்ளனர். மனநோய் தொடரபான வார்த்தைகளை பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள்தான் இந்தப் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதை ஏற்காத மிஷ்கின், ரிவைசிங் கமிட்டிக்கு சென்றார். கதைக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருப்பதால், அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை அடுத்து, நீண்ட விவாதம் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு அந்த டைட்டிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    English summary
    CBFC had objected to the use of the word ‘psycho’ in the title, and had asked the filmmaker Mysskin to change it. Then he had approached the revising committee. After several rounds of discussion, the committee has approved the title.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X