கீர்த்தி சுரேஷ் பக்கத்தில்.. பப்பி ஷேமாக பேசிய மிஷ்கின்.. மனுஷனுக்கு என்டு கார்டே இல்லையா?

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். இப்போது விஜய் சேதுபதியை வைத்து ட்ரெய்ன் படத்தை இயக்கியிருக்கும் அவர்; நடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் கீர்த்தி சுரேஷுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷை பக்கத்தில் வைத்துக்கொண்டு மிஷ்கின் பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

சித்திரம் பேசுதடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ என தனித்துவமான படங்களை இயக்கினார். அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புது அனுபவத்தை கொடுத்ததன் காரணமாக தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் அவரை சேர்த்தார்கள் ரசிகர்கள்.

இப்போதைய படம்: பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துவிட்டாலும்; அந்தப் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. அடுத்ததாக விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோரை வைத்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ட்ரெய்ன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படமும் கண்டிப்பாக ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. பெரிய ஹைப்பை இப்படம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Mysskin Birthday Comment With Keerthy Suresh Goes Viral on Social Media
Photo Credit:

நடிகராக மிஷ்கின்: இதற்கிடையே இயக்கம் மட்டுமின்றி பாடல்களையும் சிறப்பாக பாடும் திறமையை கொண்டிருக்கும் மிஷ்கின்; நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். மாவீரன், லியோ, வணங்கான், டிராகன் என எக்கச்சக்க படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த டிராகன் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நடிகராக அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. இயக்குநராக வென்றது மாதிரியே நடிகராகவும் தனது தடத்தை ஆழமாக பதித்துவருகிறார்.

கீர்த்தி சுரேஷுடன் படம்: நடிகராக பிஸியாக இருக்கும் அவர் கீர்த்தி சுரேஷ் லீடு ரோலில் நடித்திருக்கும் ஒரு படத்தில் முக்கியமான வேடத்தை ஏற்றிருக்கிறார். இதன் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது செட்டில் இருந்த ஒருவர் ஹேப்பி பர்த்டே என்று பாட; உடனே குறுக்கிட்ட மிஷ்கினோ, 'ஹேப்பி பர்த் டேவில் 'பி'யை ஏன் அழுத்தி பாடுற' என விவகாரமாக கேட்க; அருகில் இருந்த கீர்த்தி சுரேஷும், மற்றவர்களும் சத்தமாக சிரித்துவிட்டார்கள்.

மனுஷனுக்கு என்டு கார்டே இல்லையா?: இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்க்ளோ, மிஷ்கின் தனது மனதில் என்ன இருந்தாலும் அதை அப்படியே பேசிவிடக்கூடியவர். அவருக்கு ஒரு என்டு கார்டே இல்லையா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக, தனது ஓபன் பேச்சால் மிஷ்கின் சில சர்ச்சைகளை சந்தித்திருக்கிறார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X