திருட்டு விசிடியில் படம் பார்ப்பது 12வயது குழந்தையை கற்பழிப்பதற்கு சமம் - மிஷ்கின்

நேற்று காலை சென்னை கமலா திரையரங்கில் நடந்த போங்கடீ நீங்களும் உங்க காதலும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், "இந்தப் படக் காட்சிகளைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. திரையில் அவர்கள் டான்ஸ் ஆடுவதையெல்லாம் பார்த்துவிட்டு, பக்கத்தில் சேரன் உஸ் உஸ்ஸு என மூச்சு விடுகிறார். அதையெல்லாம் நாம பண்ண முடியாது சார். நாம காதலை சொல்றதுக்கே காலம் முடிஞ்சிருது. சினிமா இல்லாமல் வாழ்க்கை இல்லை. அனைத்திலும் சினிமா இருக்கிறது.
ஒரு படத்தை எடுத்து தயாரிப்பாளராகி வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். என்னைப் பெற்ற போது என் தாய் கூட இவ்வளவு வலியை அனுபவித்திருக்க மாட்டாள். ஒரு திரைப்படம் என்பது இயக்குனரின் குழந்தை. அந்த குழந்தை தியேட்டரில் பிறந்த சில நாட்களில் நீங்கள் திருட்டுத்தனமாக திருட்டு டிவிடியில் பார்க்கிறீர்கள்.
திருட்டு டிவிடியில் படம் பார்ப்பது 12 வயது குழந்தையை கற்பழிப்பதற்கு சமம். ஒரு இயக்குனரின் கழுத்தை அறுக்கும் செயல்.
நிலைமை இன்று மோசமாகி, படம் ரிலீஸாவதற்கு முன்பே திருட்டு டிவிடி விற்கிறார்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திருட்டு டிவிடியை எனக்கே 'சார் நல்ல பிரிண்ட் சார்' என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
திருட்டு டிவிடியில் பார்க்கவேண்டாம் என்று சொல்லவில்லை. படம் ரிலீஸ் ஆகி 20 நாள் கழிச்சாவது பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் விக்ரமன், சேரன் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். அப்படிப்பட்ட சாதனையாளர்கள் இங்கு வந்து படம் ரிலீஸ் செய்யமுடியவில்லையே என்று கவலைப்படுகின்றனர். இது ஆரோக்கியமான செய்தியில்லை.
அப்புறம் இந்த டைட்டில் மீது எனக்கு சின்ன வருத்தம் இருக்கிறது. இன்னும் மைல்டா நளினமா வச்சிருக்கலாம்," என்று ஆதங்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications











