கருப்பு ஹிட்டெல்லாம் ஓகேதான்.. வாடிவாசல் படத்தை நினைத்து ஃபீல் செய்யும் இயக்குநர்.. என்ன சொன்னார்?
சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் கருப்பு திரைப்படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. இதுவரை அந்தப் படம் உலகம் முழுவதும் 160 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடினாலும்; வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருந்த வாடிவாசல் ட்ராப்பானதை நினைத்து வருத்தமும் படுகிறார்கள். உண்மையில் கருப்பு படம் வந்த ஸ்லாட்டில் வாடிவாசல் வந்திருக்க வேண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யா மிகச்சிறந்த நடிகராக இருந்தாலும், அவருக்கென்று கமர்ஷியல் ரசிகர் கூட்டம் இருந்தாலும்; கடந்த சில வருடங்களாகவே சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் கிடைக்கவில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் நல்லபடியாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை உள்ளிட்ட விஷயங்கள் சொதப்பி ட்ரோலில் சிக்கிக்கொள்கின்றன. அப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடித்தார். திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது.

நீண்ட வருடங்கள் கழித்து: இத்தனை வருடங்கள் கழித்து இப்படி ஒரு கமர்ஷியல் ஹிட் கிடைத்திருப்பது சூர்யாவின் ரசிகர்களுக்கு மன நிறைவாக இருக்கிறது. இதுவரை அந்தப் படம் உலகளவில் மொத்தம் 160 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறதாம். இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக 200 கோடி ரூபாய் வசூலை செய்துவிடும் என்றே கருதப்படுகிறது. எனவே விரைவில் சூர்யாவும் 200 கோடி க்ளப் ஹீரோவாக மாறப்போகிறார். இப்படி ஒரு வெற்றி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜியுடன் இன்னொரு படமும் அவர் செய்ய வேண்டுமென்பது ஆசையாக இருக்கிறது.
வாடிவாசல்: என்னதான் கருப்பு படத்துடைய வெற்றி நிம்மதியை தந்தாலும்; இன்னொரு பக்கம் வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் நின்று போனதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். இந்தப் படம் வந்த ஸ்லாட்டில் வாடிவாசல்தான் வரவிருந்தது. வெற்றிமாறன் இயக்கம், கலைப்புலி தாணு தயாரிப்பு என அதில் இருந்த விஷயங்களே அவ்வளவு பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் எண்ண வைத்தன. கண்டிப்பாக இது இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் எனவும் கணிப்புகள் வந்தன.
ட்ராப் ஆன படம்: காளைகளை வைத்து டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. சூர்யாவும் தனது பூர்வீக ஊரில் காளையை வளர்த்தார். லண்டனில் இதற்கான கிராஃபிக்ஸ் பணிகளும் தொடங்கப்பட்டன. இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தது படக்குழு. அமீர் உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்கவிருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் இந்தப் படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதற்கு பதிலாகத்தான் தாணுவுக்கு அசுரன் திரைப்படத்தை வெற்றி செய்து கொடுக்கிறார் என்றும் ஒரு பேச்சு உண்டு.
மிஷ்கின் பேட்டி: இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "வாடிவாசல் கதையை வெற்றிமாறன் எனக்கு சொன்னார். அது அசாதாரணமாக இருந்தது. அது நடக்காமல் போனதில் எனக்கு ரொம்பவே வருத்தம். ஆனால் கருப்பு படத்தின் மூலம் சூர்யா வெற்றி பெற்றிருப்பது எனக்கு சந்தோஷம். அவர் ஒரு ஜீனியஸ் நடிகர். சமீபத்தில்கூட சில தடைகளை சந்தித்தார். பாலாஜி அவருக்கு ஒரு ஹிட்டை கொடுத்திருப்பது மகிழ்ச்சி.
வெற்றிமாறன் சொன்னபோது: இது எல்லாத்தையும்விட வெற்றிமாறன் என்னிடம் வாடிவசல் கதையை சொன்னபோது நான் அதிகம் மகிழ்ச்சியடைந்தேன். என்ன ஒரு கதை அது. ரொம்ப ரொம்ப அழகான கதை. அது மட்டும் வந்திருந்தால் சூர்யாவுக்கு அது ஆல் டைம் ஹிட்டாக அமைந்திருக்கும். ஆனால் நடக்கவில்லை. இனியும் அது நடப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கிறேன்" என்றார். முன்னதாக மிஷ்கினின் லைன் அப்பை பொறுத்தவரை, விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் ட்ரெய்ன் படத்தை இயக்கியிருக்கிறார். அது விரைவில் வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications
