புனித் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல… உண்மையான ஹீரோ… மிஸ்கின் உருக்கம் !

சென்னை : புனீத் ராஜ்குமாரன் மறைவு குறித்து தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மிஸ்கின் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் கான்டீர்வா மைதானத்திலிருந்து ஸ்டுடியோவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார் சனிக்கிழமை அன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு அருகில் இருந்த விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு வரும் போதே, சுயநினைவை இழந்த நிலையிலேயே அனுமதிக்கப்பட்டார்.

புனித் உயிரிழந்தார்

புனித் உயிரிழந்தார்

புனித் உடல் நலம் குறித்து தகவல் பரவியதை அடுத்து அவரது ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்து அவர், குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்தனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த புனித், சனிக்கிழமை 11.40 மணி அளவில் உயிரிழந்த தகவலை மருத்துவமனை அறிவித்தது.

உடல் அடக்கம்

உடல் அடக்கம்

இந்த சோகக்செய்தி ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கர்நாடக முழுவதும் ஒரு வித பதற்றம் ஒரு வித சோகம் சூழ்ந்து கொண்டது. இன்றைய தினம் கான்டீர்வா ஸ்டுடியோவில் புனித்தின் இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரது உடல் கான்டீர்வா மைதானத்திலிருந்து ஸ்டுடியோவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து புனித்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.

பேரதிர்ச்சி

பேரதிர்ச்சி

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மிஸ்கின் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புனித் ராஜ்குமாரின் மறைவுச் செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் தொலை பேசியில் என்னிடம் ஒரு படம் குறித்து பேசினார். நான் பெங்களூரு சென்று அவரிடம் ஒரு கதையை கூறினேன்.

கட்டியணைத்தார்

கட்டியணைத்தார்

அவருக்கு கதை பிடித்து விட்டது, இருப்பினும், கதைக்கு பெரிய பட்ஜெட் தேவை என்பதால், அதை படமாக்குவது சாத்தியமில்லை என்பதை அவர் வெளிப்படையாகவே என்னிடம் கூறினார். என்னை வழியனுப்ப பார்க்கிங் பகுதிக்கு இறங்கி வந்தார். நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பிரிந்து சென்றோம். விரைவில் ஒரு படம் பண்ணலாம் என்று உறுதியேற்றுக் கொண்டோம்.

நீங்க ஒரு உண்மையான ஹீரோ

அன்புள்ள புனித், நீங்க வெறும் சினிமா ஹீரோ மட்டுமல்ல, நீங்க ஒரு உண்மையான ஹீரோ. உங்கள் அன்பு, பணிவு, நேர்மை ஆகியவற்றால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான நண்பர்களும், ரசிகர்களும் கிடைத்துள்ளனர். இயற்கை அன்னை தனது மடியில் உங்களை தவழ வைக்க விரும்பிய தூய்மையான குழந்தை நீங்கள். எங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களை நாங்கள் இழந்து தவிப்போம் புனித் என்று உருக்கமான ஒரு இரங்கல் அறிக்கையை இயக்குனர் மிஸ்கின் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X