பயங்கரமா குடிப்பேன்.. குடிகாரனாக்கியதே இளையராஜாதான்.. மிஷ்கின் அலப்பறை பேச்சு

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். இப்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சூழல் இப்படி இருக்க மிஷ்கின் மேடை ஏறினாலே அன்றைய நாள் கன்டெண்ட்டுகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் பாட்டல் ராதா படத்தின் விழாவில் மேடை ஏறி அவர் பேசியிருக்கும் விஷயங்கள் சமூக வலைதளங்களை அதிர வைத்திருக்கின்றன.

வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்து சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். அந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. முதல் படத்திலேயே நல்ல இயக்குநர் என்ற பெயரை பெற்றார் அவர். அடுத்ததாக அவர் இயக்கிய அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா உள்ளிட்ட படங்களும் சிறந்த படங்கள் என்ற பெயரை பெற்று தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர் என்ற இடத்துக்கு அவரை நகர்த்தியது.

mysskin ilayaraaja bottle radha

ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு: மிஷ்கினின் கரியரிலேயே ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு ஆகிய படங்கள் முக்கியமான படங்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் எப்போதும் இருக்கும். அதேபோல் பிசாசு திரைப்படம் அதுவரை வந்த பேய் படங்களின் டெம்ப்ளேட்டுகளை உடைத்து பேய்களை தேவதைகளாக காண்பிக்கலாம் என்கிற நிலையை உருவாக்கியது. அடுத்ததாக அவர் இயக்கிய பிசாசு 2 திரைப்படம் இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது. இதற்கிடையே துப்பறிவாளன் திரைப்படத்தை இயக்கி விஷாலுக்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு ஹிட் படத்தை கொடுத்தார் மிஷ்கின்.

நடிகராக மிஷ்கின்: ஒருபக்கம் இயக்கத்தில் பிஸியாக இருந்த அவர் மறுபக்கம் நடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். சவரக்கத்தி, மாவீரன், லியோ என வரிசையாக அவர் படங்களில் நடித்துவருகிறார். இயக்கத்தில் எப்படி தனித்துவத்தை காண்பித்தாரோ அதேபோல் நடிப்பிலும் தனது தனித்துவத்தை தவறாமல் காண்பித்துவருகிறார். இப்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். நிச்சயம் இந்தப் படமும் அவரது கரியரில் முக்கியமான ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேடையில் மிஷ்கின்: மிஷ்கினை பொறுத்தவரை தனது மனதில் என்ன இருக்கிறதோ அதை எந்தவித அலங்காரமுமின்றி மேடையில் கொட்டுபவர். கொட்டுக்காளி திரைப்படத்தின் விழாவில் நான் நிர்வாணமாக நிற்பேன் என்று ஓபனாக பேசி அதிர வைத்தார். பேரன்பு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் மம்மூட்டி குறித்து அவர் பேசியது சர்ச்சையானது. இப்படி பல படங்களின் விழா மேடைகளில் பேசி கன்டெண்ட்டுகளுக்கு பஞ்சம் வைக்காதவர் அவர்.

பாட்டல் ராதா: அப்படித்தான் பாட்டல் ராதா படத்தின் விழாவிலும் பேசியிருக்கிறார். நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் தினகரன் இயக்கத்தில் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பாட்டல் ராதா படத்தின் விழா நேற்று நடந்தது. இதில் வெற்றிமாறன், லிங்குசாமி,மிஷ்கின், அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய மிஷ்கின், "நான் மிகப்பெரிய குடிகாரன். மதுவை ரசித்து, ருசித்து குடிப்பவன். ஆனால் ஒருபோதும் அந்த மது என்னை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது கிடையாது.

இளையராஜாதான்: நான் உதவி இயக்குநராக இருந்தபோது குடிப்பதற்காக செல்வேன். கைகளில் இரண்டு கொசுவர்த்திகளுடன் செல்வேன். ஏனெனில் குடிக்க ஆரம்பித்தால் சினிமா பேசுவோம். அதேபோல் இளையராஜாவை பாடுவோம். நான் பாட ஆரம்பித்தால் எங்கிருந்தோ எனக்கு ஒரு பாட்டில் வந்துவிடும். முக்கியமாக இளையராஜாதான் பலரை குடிகாரனாக மாற்றியது. அவர்தான் குடிக்கு ஆரம்ப புள்ளி. இந்த போதைகளைவிடவும் இளையராஜா மிகப்பெரிய போதை. இந்தப் படம் குடிக்கு அடிக்ட் ஆன ஒருவனை எப்படி அதிலிருந்து மீட்க வேண்டும்; அவனிடம் எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பதை பேசுகிறது.

குடி எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. குடி இல்லாத நாடே இல்லை. சாராயம் காய்ச்சும் அளவுக்கு குடியில் எனக்கு அனுபவம் இருக்கிறது.
கண்டிப்பாக இந்தப் படமும் பெரும் நம்பிக்கையை கொடுக்கும். சோமசுந்தரம் இந்தப் படத்தில் அப்படி நடித்திருக்கிறார். அதேபோல் ஜமா இயக்குநர் பாரி இளவழகனும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X