Mysskin: சினிமாவை விட்டு விலக மிஷ்கின் முடிவு.. எல்லாத்துக்கும் காரணம் அதுவா? ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருபவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தொடங்கி, இவரது நடிப்பில் வெளியான படங்கள், அவரது குரலில் வெளியான பாடல்கள் என அனைத்திற்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படியான நிலையில் டிராகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் தான் சினிமாவில் இருந்து விரைவில் விலகத் திட்டமிட்டுள்ளதாக கூறினார். இவரது இந்தப் பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றார். இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்றார். தனது முதல் படத்தில் ஏற்படுத்திய தாக்கம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிஷ்கினுக்கு பெரும் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது. இதனால், அவரது அடுத்த படமான அஞ்சாதே படத்திலும் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. இவரது இயக்கத்தில் வெளியான நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் மற்றும் சைக்கோ படங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம், ட்ரைன். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள இந்த படம் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் ரிலீஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. மிஷ்கின் இயக்குநராக மட்டும் இல்லாமல், நடிகராகவும் ஜொலித்து வருகிறார். மிஷ்கின் ஒரு படத்தில் இருக்கிறார் என்றால், அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. மிஷ்கின் நடித்துள்ள படம் டிராகன். இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இந்தப் படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மிஷ்கின் தான் விரைவில் சினிமாவை விட்டு விலக உள்ளதாக தெரிவித்தார்.
கெட்ட வார்த்தை: அந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசும்போது, ” நான் பாட்டில் ராத நிகழ்ச்சிக்குப் பின்னர் சுமார் ஒரு ஆண்டிற்கு எந்த மேடையிலும் கலந்து கொள்ளக் கூடாது என இருந்தேன். (அதைப் பேசும் போது ஆங்கிலத்தில் ஒரு கெட்ட வார்த்தை மிஷ்கின் பயன்படுத்தினார்) ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மூன்று பேர்தான் காரணம். ஒன்று அகோரம் சார். அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகிய மூன்று பேருக்காகவும் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.
மிஷ்கின்: மிஷ்கினிடம், அவரது புகைப்படத்தை காட்டி அவர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கும் போது, “ கண்ணு தெரியாத மான்ஸ்டர். சினிமா கொஞ்சம் நல்லவர்களும் நிறைய கெட்டவர்களும் உள்ள சினிமா உலகத்தில் அதிகம் கஷ்டப்பட்டுக் கொண்டு, எதோ சமாளித்துக் கொண்டு உள்ளார். விரைவில் சினிமாவை விட்டு வெளியே போகப் போகிற இயக்குநர் எனக் கூறினார். மிஷ்கினின் இந்தப் பேச்சு ரசிகர்களையும் அந்த அரங்கில் இருந்தவர்களையும் பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது.
அதிர்ச்சி: மிஷ்கின் இப்படி முடிவெடுக்க பாட்டில் ராதா இசை வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியதற்கு வந்த எதிர்ப்புகள் ஒரு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. மேலும் மிஷ்கின் சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என மனைவி மற்றும் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அப்படியான மிஷ்கின், சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார் என்றால், அவருக்கு மிகவும் கசப்பான அனுபவங்கள் ஏதாவது ஏற்பட்டிருக்கும் அதனால்தான் மிஷ்கின் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். இவரது இயக்கத்தில் உருவாகி ரிலீஸ் ஆகாமல் உள்ள படம் என்றால் அது, பிசாசு 2. ஆண்ட்ரியா நடித்துள்ள இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிஷ்கின் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்தது குறித்து தகவல் கேள்விப்பட்ட ரசிகர்கள், மிஷ்கின் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் இயக்கவும் வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











