Mysskin: “தலையை எடுத்து டேபிளில் வைக்கும் படங்கள்தான் இயக்குவேன்”... குலை நடுங்க வைத்த மிஷ்கின்!
சென்னை: விஜய் ஆண்டனியின் 'கொலை' திரைப்படம் நாளை (ஜூலை 21) வெளியாகிறது.
பாலாஜி கே குமார் இயக்கியுள்ள இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், தலையை எடுத்து டேபிளில் வைக்கும் படங்களை தான் இயக்குவேன் என பேசியது அங்கிருந்தவர்களை குலை நடுங்க வைத்தது.

தலையை எடுத்து டேபிளில் வைப்பேன்: விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள 'கொலை' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. பாலாஜி கே மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், மீனாக்ஷி செளத்ரி, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு கொலையை கண்டுபிடிக்கும் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வரவேற்பை பெறும் என விஜய் ஆண்டனி நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
இந்நிலையில், கொலை படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் கொலை படக்குழுவினருடன் இயக்குநர் மிஷ்கினும் கலந்துகொண்டார். அப்போது கொலை திரைப்படம் குறித்தும் விஜய் ஆண்டனியின் நடிப்பை பாராட்டியும் பேசிய மிஷ்கின், அவர் இயக்கும் படங்கள் பற்றியும் மனம் திறந்தார். அதாவது தன்னிடம் ஜாலியான படம் எடுக்குமாறு பலரும் கூறினார்கள். ஆனால், சத்தியமாக என்னால் அப்படி படம் எடுக்க முடியாது என்றுள்ளார்.
மேலும் ஜாலியான படம் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு நான் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் மிஷ்கின் அதிரடியாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நாலு பேர் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவது மாதிரியெல்லாம் என்னால் படம் எடுக்க முடியாது. ஒருவனின் தலையை எடுத்து டேபிளில் வைப்பது மாதிரி தான் படம் எடுக்க வரும் எனக் கூறி அனைவரையும் குலை நடுங்க வைத்துள்ளார்.
'சித்திரம் பேசுதடி' மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின், அடுத்தடுத்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்களை இயக்கினார். இவரது படங்கள் பெரும்பாலும் சைக்கோ ஜானரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடூரமான கொலை காட்சிகளுடன் மிரட்டலாக படம் எடுப்பதே மிஷ்கினின் வழக்கமாகும்.
குறிப்பாக துப்பறிவாளன், சைக்கோ படங்கள் மிஷ்கினின் மிரட்டலான மேக்கிங்கில் ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்தது. ஆனாலும், அவர் கொஞ்சம் ஜாலியான படம் எடுப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு, அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதாக அதிரடியாக பேசி அதிர வைத்துள்ளார். மிஷ்கினின் இந்த பேச்சை ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் "இந்த மாதிரியான ஆட்களையும் நீக்க வேண்டும், சினி உலகத்தை தவறாக சித்தரிக்கும் ஆட்களையும் நீக்க வேண்டும்" என ஆவேசமாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











