காதல் தோல்விக்கு இளையராஜாதான்.. மிஷ்கின் எமோஷனல் பேச்சு.. மனுஷன் உருகுறாரே

சென்னை: இளையராஜா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னும் பல காலத்துக்கு அழியாது. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது உள்ள இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக அவரது இசையில் விடுதலை 2 வரவிருக்கிறது. மேலும் அவரது வாழ்க்கை வரலாறும் படமாகிறது. சூழல் இப்படி இருக்க கடந்த சில மாதமாகவே இளையராஜா மீது ஒருதரப்பினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கும் சூழலில் இயக்குநர் மிஷ்கின் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமா இசையில் இளையராஜாவின் வரலாறு யாராலும் அழிக்க முடியாதது. தமிழ்நாடு வரைபடத்தில் எங்கோ ஓரு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து கிளம்பிவந்து இன்று உலகம் முழுவதும் தெரியும் ஞானியாக அவர் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது இசை பயணம் விடுதலையில் வந்து நிற்கிறது. அடுத்ததாக விடுதலை 2 படம் வரவிருக்கிறது. இப்போது உள்ள இயக்குநர்களுடன் இளையராஜா இணைந்து பணியாற்ற மறுக்கிறார் என்ற விமர்சனத்தையும் அவர் அடித்து நொறுக்கியிருக்கிறார்.

Mysskin Ilayaraaja

கர்வமா தலைக்கனமா?: இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு புகழை சம்பாதித்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையையும், எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறார். அவரை எதிர்ப்பவர்கள் வைக்கும் முதல் காரணமே இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்பதுதான். ஆனால் இளையராஜாவுக்கு இருப்பது தலைக்கனம் இல்லை அவரது இயல்பு என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். இதற்கிடையே அவரது வாழ்க்கை வரலாறும் உருவாகவிருக்கிறது. அதை வைத்து என்னவெல்லாம் விவாதங்கள் எழப்போகின்றனவோ என்றும் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமீபத்திய பஞ்சாயத்து: இளையராஜா எது பேசினாலும் சரி, இளையராஜாவை பற்றி யார் பேசினாலும் சரி அது பெரும் பஞ்சாயத்தாக மாறி நிற்கிறது. சமீபத்தில்கூட பாடலுக்கு முக்கியம் மொழியா, இசையா என்று பேசிவைக்க பெரும் பஞ்சாயத்து வெடித்தது. ஆனால் இளையராஜாவோ இதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் குறுகிய காலத்தில் ஒரு சிம்பொனியையே எழுதி முடித்துவிட்டு கூலாக ஒரு வீடியோவை வெளியிட்டார். மேலும் ஐஐடியில் இளையராஜா பெயரில் இசை ஆராய்ச்சி மையம் ஒன்றும் அமையவிருக்கிறது. அந்த மையத்திற்கான அடிக்கல்லை இளையராஜா நாட்டினார்.

மிஷ்கின் பேட்டி: இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் அளித்த ஒரு பேட்டியில், "எங்கள் அப்பா சினிமா பாடல்களை நன்றாக பாடுவார். எங்கள் அம்மாவும் அப்படித்தான். ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். அந்த மாதிரியான சூழலில்தான் வளர்ந்தேன். எங்கள் வீட்டில் அப்போது எல்லாம் கேசட் கிடையாது. பக்கத்து வீட்டில்தான் கேட்கணும். அப்படித்தான் நிழல்கள் படத்தின் கேசட்டை வாங்கி கேட்டோம்.

இரவு முழுவதும்: அந்தப் பாடலை பக்கத்து வீட்டில் ஒரு அண்ணன் போட்டார். அன்றைய இரவு முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தோம். சாப்பிடக்கூட இல்லை. இளையராஜாவை நான் மட்டும் ஆச்சரியமாக பார்க்கவில்லை. வாழ்க்கையில் மீனிங்ஃபுல்லா இருக்கிறார். காதலுக்கு எம்.எஸ்.விக்கு தேவைய்; இளையராஜா காதல் தோல்விக்கு தேவைப்பட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X