நல்லவேளை கேமராவ கீழே இறக்கல.. சூரி பாத்ரூம் போன சீனை சிலாகித்த மிஷ்கின்.. சிரிப்பை அடக்க முடியல!

சென்னை: கொட்டுக்காளி படத்தில் சூரி சிறுநீர் கழிக்கும் ஒரு காட்சியில் பிரம்மாதமாக நடித்துள்ளார். இயக்குநர் வினோத்ராஜ் கேமராவை அதன் பக்கத்திலேயே கொண்டு சென்றது குறித்து மிஷ்கின் இன்று நடைபெற்ற கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிலாகித்து பேசியது ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

மிஷ்கினின் பேச்சை மட்டும் கட் செய்து சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே இயக்குநர் வினோத்ராஜ் தன்னை செருப்பால் அடித்து விட்டார் என்று பேசி யூடியூப் சேனல்களுக்கு நல்ல தம்ப்நைல் கொடுத்திருந்தார் மிஷ்கின்.

Kottukaali Soori Mysskin

மிஷ்கினுக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் பேசியது பெரிய விவகாரத்தையே தற்போது சோஷியல் மீடியாவில் கிளப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் அதிரடி: கொட்டுக்காளி படம் போல எஸ்கே புரொடக்‌ஷனில் நிறைய படங்கள் வரும்; இவர்களை அடையாளப்படுத்துவது தான் என் வேலையே தவிர இவர்களை கண்டுபிடித்தது நான் தான் வாழ்க்கை கொடுத்தது நான் தான் என எனக்கு மற்றவர்கள் சொன்னது போல நான் யாரையும் சொல்ல மாட்டேன் என சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் அதிரடியாக பேசியது தனுஷ் ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் தான் சிவகார்த்திகேயனை கண்டுபிடித்து வளர்த்து விட்டார் என தனுஷ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பேசி வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

சூரி பாத்ரூம் போகும் சீன்: கொட்டுக்காளி படத்தில் சூரி நடித்துள்ள சிறுநீர் கழிக்கும் காட்சி அப்படியே தத்ரூபமாக எடுக்கப்பட்டு இருப்பதாகவும், வினோத்ராஜ் கேமராவை தூக்கிக் கொண்டு அவர் அருகே சென்ற போது, திடீரென கேமராவை டில்ட் டவுன் செய்து விடப் போகிறாரோ என பயந்து விட்டேன் என மிஷ்கின் பேசியதும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. அத்துடன் நிறுத்தாமல், டில்ட் டவுன் பண்ணி காட்டினால் கூட சந்தோஷப்பட்டு இருப்பேன் என பேசி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி விட்டார் மிஷ்கின்.

வெற்றிமாறன் பேச்சு: இந்த படத்தில் அரசியல் இருக்கு, இலக்கியம் இருக்கு, அதையெல்லாம் தாண்டி கமர்ஷியலும் இருக்கு. சூரி ஒரு நல்ல கமர்ஷியல் நடிகர், அவரை இப்படி எப்படி காட்டுவது என வினோத் ரொம்பவே பயந்திருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி சூரி தான் இந்த படத்துக்கு சரியான தேர்வாக இருப்பார் என அவர் நினைத்து உருவாக்கியது தான் இத்தனை பேரும் அவரை பற்றியும் அவரது படைப்பை பற்றியும் பேசக் காரணம் என்றார்.

சிகரெட் பாக்கெட் விலை: ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை 200 ரூபாய் விற்கிறது. ஒரு குவார்ட்டர் விலை. அதையெல்லாம் விட்டு விட்டு, இந்த படத்துக்கு டிக்கெட் வாங்கி பாருங்கள். இந்த படத்துக்கு புரமோட் செய்ய நான் நிர்வாணமாக டான்ஸ் ஆட வேண்டுமென்றால் கூட ஆடத் தயார் என மிஷ்கின் பேசிய பேச்சுக்களையும் சோஷியல் மீடியாவில் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். கொடுக்காளி திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X