மிஷ்கினை பங்கமாக கலாய்த்த யூகி சேது.. நிகழ்ச்சி முடியுறதுக்குள்ள யூடியூபில் வீடியோ.. பயங்கர ஃபன்!
சென்னை: அழகான கண்களை கருப்புக் கண்ணாடி போட்டு மறைத்திருக்கிறார் மிஷ்கின். அவருக்கு சினிமாவில் எல்லாமே தெரியும் என ப்ரூஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யூகி சேது செம ஃபன்னாக பேசினார். அதன் பின்னர் மேடை ஏறி மிஷ்கின் பேசும் போது, அதுக்குள்ள யூடியூபில் வீடியோ வந்துடுச்சு, மிஷ்கினை பங்கமாக கலாய்த்த யூகி சேது என ஆரம்பத்திலேயே சரவெடியாக பேச ஆரம்பித்தார் மிஷ்கின்.
நடன இயக்குநர் பிருந்தாவை தொடர்ந்து தற்போது ராதிகா மாஸ்டரும் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்த சாய் தன்ஷிகாவை வைத்து ப்ரூஃப் எனும் படத்தை ராதிகா மாஸ்டர் இயக்கிய நிலையில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் ஏகப்பட்ட விஷயங்களை பேசியுள்ளார்.

ராதிகாவை வாடி போடி என்று தான் கூப்பிடுவேன் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு மேடை நாகரிகம் எல்லாம் பெரிதாக தெரியாது என மிஷ்கின் வழக்கம் போல தனது பாணியில் பேசியுள்ளார்.
யூகி சேது பேச்சு: அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யூகி சேது சினிமா தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், 300 படங்கள் வெளியான நிலையில் 30 படங்கள் வெற்றி பெற்று இருந்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. சினிமாவில் கடும் போட்டிகள் நிலவி வருகின்றன. பெரிய இயக்குநர்களுக்கு வெற்றி படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை எனக் கூறினார். மேலும், மிஷ்கின் பற்றி பேசும்போது, மிஷ்கின் நன்றாக சிரிப்பார் ஆனால் எப்போதுமே கோபத்துடனே முகத்தை வைத்துக் கொள்வார். மிஷ்கின் கண்கள் அழகாக இருக்கும் ஆனால் கருப்பு கண்ணாடி போட்டு மறைத்து விடுவார். பகலிலேயே எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் பலருக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் இவர் இரவில் கூட கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு ஊசி நூல் கோர்ப்பார் என பேசினார்.

மிஷ்கின் கலகலப்பு: யூகி சேதுவை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் ப்ரூஃப் படத்தின் இயக்குநர் ராதிகாவை வாடி போடி என்று தான் அழைப்பேன் என்றும் தனது முதல் படத்திலேயே அவரை ஒரு குத்து பாடலுக்கு டான்ஸ் பண்ண சொன்னேன். ஆனால், அவர் என்னுடைய வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள் என்றார். அடுத்த படத்திற்கு அழைத்தபோதும் அதே வார்த்தைதான் சொன்னார் என இயக்குநர் குறித்து பேசிய மிஷ்கின்.
அதுக்குள்ள யூடியூபில்: அடுத்து மிஷ்கினை பங்கமாக கலாய்த்த யூகி சேது என இந்த நிகழ்ச்சியே இன்னும் முடியல அதற்குள் ஒரு யூடியூப் சேனலில் வீடியோ வந்துடுச்சு என செம ஃபன் பண்ணி பேசினார். மேலும், ஒரு நிகழ்ச்சி முடிவதற்கு முன்பாகவே சர்ச்சை தலைப்புகளை வைத்து எப்படி யூடியூப் சேனல்கள் வேலை பார்க்கின்றனர் என பாருங்கள் என அந்த நிகழ்ச்சியிலேயே மிஷ்கின் பேசியது அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. ப்ரூஃப் படத்துக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விரைவில் அந்த படம் திரைக்கு வர காத்திருக்கிறது. தன்சிகா நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications