Shankar 25: ஷங்கருக்கு 25 வகை பரிசு கொடுத்து அசத்திய மிஷ்கின்

By Siva

Recommended Video

Director Shankar: 25 ஆண்டுகளை தாண்டிய பிரபல இயக்குநர் ஷங்கர்

சென்னை: ஷங்கர் இயக்குநராகி 25 ஆண்டுகளை தாண்டியதை பிரபல இயக்குநர்கள் சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.

ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குநர் ஆனவர் ஷங்கர். 1993ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த படம் வெளியானது. அதில் இருந்து இந்நாள் வரை கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குநராக உள்ளார் அவர்.

இந்நிலையில் ஷங்கர் இயக்குநராகி 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி இயக்குநர் மிஷ்கின் பார்ட்டி கொடுத்துள்ளார்.

 ஷங்கர் 25

ஷங்கர் 25

மிஷ்கின் கொடுத்த பார்ட்டியில் இயக்குநர்கள் மணிரத்னம், கவுதம் மேனன், பா. ரஞ்சித், மோகன்ராஜா, பாண்டிராஜ், பாலாஜி சக்திவேல், சசி, அட்லி, எழில், லிங்குசாமி, வசந்த பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பார்ட்டிக்கு வந்த அனைவரும் S-25 என்று எழுதியிருந்த டி-சர்ட் அணிந்திருந்தனர்.

கேக்

கேக்

பார்ட்டியில் ஷங்கர் கேக் வெட்டினார். ஷங்கருக்கு மிஷ்கின் 25 வகையான பரிசுப் பொருட்களை கொடுத்து அசத்தியுள்ளார். அந்த பரிசுப் பொருட்கள் என்னவென்று சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசும் கொடுத்துள்ளார்.

முத்தம்

முத்தம்

மிஷ்கின் ஷங்கருக்கு அளித்த பரிசுப் பொருட்களில் ஒன்றை சரியாக கணித்த இயக்குநர் பாண்டிராஜுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம் கொடுத்துள்ளார் மிஷ்கின். மேலும் 26வது பரிசாக அனைத்து இயக்குநர்களையும் ஷங்கருக்கு முத்தம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

வசந்த பாலன்

ஷங்கருக்கு நடந்த பாராட்டு விழா குறித்து புகைப்படத்துடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X