அடடா... அடுத்த படத்தில் ஹீரோவை மாத்திட்டாரே மிஷ்கின்!
இயக்குனர் மிஷ்கினின் அடுத்த படத்தில் கதாநாயகன் மாற்றப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் சாந்தனுவுக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்
வித்தியாசமான கதைக்களங்கள், காதாப்பாத்திரங்கள் மூலம் தமிழ்சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம், நன்கு பேசப்பட்டதோடு வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.

இயக்குனர் மிஷ்கின் அடுத்தபடியாக லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாந்தனுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்றும் அறிவித்தார்
தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் மிஷ்கின் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் திரைப்படம் கைவிடப்பட்டு, உதயநிதி தயாரித்து நடிக்கவுள்ள படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாந்தனு நடிக்கவிருந்த அதே படத்தில்தான் உதயநிதி நடிக்கிறாரா அல்லது வேறு படமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











