சினிமாவில் நான் ஒன்றும் சந்தோஷமாக இல்லை.. சீக்கிரம் போக வேண்டும்.. மிஷ்கின் ஓபன் டாக்

சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் டிராகன், வணங்கான் ஆகிய படங்களில் கடைசியாக நடித்தார். இந்நிலையில் அவர் பறந்து போ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது.

வின்சென்ட் செல்வாவிடம் யூத் படத்தில் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் இயக்குநராக அறிமுகமானார். நரேன், பாவனா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் ஆஹா ஓஹோ அளவுக்கு ஹிட் இல்லை என்றாலும் மிஷ்கினுக்கும் அவரது திரை மொழிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்ற வரிசையில் இணைந்தார்.

முகமூடி மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. எதார்த்த வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிஷ்கின் பேசிய பேச்சுக்கும், படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.

Mysskin Latest Speech in Ram s Parandhu Po Movie Audio Launch
Photo Credit:

பிசாசு: பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். அடுத்ததாக அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் படம் வெளியாகவில்லை. இப்போது அவர் ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

சுற்றும் சர்ச்சைகள்: இதற்கிடையே மிஷ்கின் ஒரு சினிமா விழாவில் கலந்துகொண்டால் கண்டிப்பாக அப்போது கண்டெண்ட்டுகள் நிறைய கிடைக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், 'இந்தப் படம் ஓடுவதற்காக நிர்வாணமாக கூட நிற்பேன்' என்று கூறினார். அதேபோல் வாழை படத்தின் விழாவில் கலந்துகொண்டபோது, கலையரசனை பார்த்து, நான் வாய்ப்பு கொடுத்தேன். கஞ்சா குடித்தது போல் வந்து நின்றான் கலை என்று தெரிவித்திருந்தார். அதேபோல் பாட்டில் ராதா பட விழாவில் அவர் பேசி சர்ச்சையாக; பிறகு மன்னிப்பு கேட்டார்.

அதிகரிக்கும் மவுசு: அவர் இந்த மாதிரி திரைப்பட விழாக்களில் பேசுவது ஒருபக்கம் சர்ச்சையானாலும் மறுபக்கம் ஒருதரப்பினரால் ரசிக்கவே படுகிறது. அதேசமயம் அப்படி பேசும்போது கொஞ்சம் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து மிஷ்கின் பயன்படுத்தலாம் என்ற வாதமும் எழுந்திருக்கிறது. அவரும் இப்போது சர்ச்சையாக பேசுவதை குறைத்துவருகிறார். இந்நிலையில் ராம் இயக்கியிருக்கும் பறந்து போ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

மிஷ்கின் பேச்சு: அவர் அந்த விழாவில் பேசுகையில், "ட்ரெய்ன், பிசாசு 2 ஆகிய படங்கள் வெளியான பிறகு மிஷ்கினுக்கு சினிமாவில் அட்ரெஸே இல்லாமல் போய்விடும் என்று ஒரு பத்திரிகை நண்பர் சொல்லியிருக்கிறார். அவரிடம் நான் தாழ்மையுடன் சொல்லிக்கொள்வது என்னவென்றால், 'நான் சினிமாவில் ஒன்றும் சந்தோஷமாக இல்லை. சீக்கிரம் சினிமாவை விட்டு போக வேண்டுமென்றுதான் எனக்கு தோன்றுகிறது. அதேபோல் இனிமேல் எந்த பட விழாவுக்கும் என்னை கூப்பிடாதீர்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X