விஷால் படத்தில் இருந்து விலகிய மிஷ்கின், இந்த ஹீரோவைதான் இயக்கப் போறாராமே... அதுக்கு சரிபடுவாரா?

By

சென்னை: 'துப்பறிவாளன் 2' படத்தில் இருந்து விலகிய மிஷ்கின், சிம்பு நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஷால் 'துப்பறிவாளன்' படத்தில் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கினார்.

Recommended Video

Baaram Poster ஒட்டிய Mysskin | Mysskin | Baaram | Priya Krishnamoorthy

ஹீரோயினாக ஆஷ்யா நடிக்கிறார். மற்றும் பிரசன்னா, ரகுமான், கவுதமி, நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.

விஷாலுடன் பிரச்னை

விஷாலுடன் பிரச்னை

இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் சில நாட்கள் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைத் திரும்பியது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியாகிக் கொண்டிருந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென மிஷ்கின் நீக்கப்பட்டார். விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட பிரச்னை பெரிதானதை அடுத்து அவரை விஷால் நீக்கியதாகக் கூறப்பட்டது. போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக ரூ.40 கோடி ஆகும் என்று மிஷ்கின் கேட்டாராம். இதுதான் பிரச்னைக்கு காரணம் என்று கூறப்பட்டது.

அடுத்தப்படம்

அடுத்தப்படம்

இதுபற்றி மிஷ்கினிடம் கேட்டபோது, 'நான் 40 கோடி கேட்கலை. 400 கோடி கேட்டேன். கிளைமாக்ஸுக்கு மட்டும் நூறுகோடி கேட்டிருக்கேன். ஏன்னா, விஷால் சேட்டிலைட்ல இருந்து குதிக்கிற மாதிரி காட்சியை எடுக்கிறோம்' என்று கிண்டலாகக் கூறியிருந்தார். பின்னர் தனது அடுத்தப்படம் பற்றி விரைவில் அறிவிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

சிம்பு நடிக்கும் படம்

சிம்பு நடிக்கும் படம்

இந்நிலையில் அவர் நடிகர் சிம்புவுடன் கைகோர்க்கப் போவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சிம்புவை சந்தித்து மிஷ்கின் கதை சொன்னதாகவும் அதைக் கேட்ட சிம்பு நடிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்ற விவரம் தெரியவில்லை. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

மாநாடு ஷூட்டிங்

மாநாடு ஷூட்டிங்

சிம்பு இப்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை ஈசிஆர் அருகே நடந்துவருகிறது. பொலிட்டிக்கல் படமான இதன் ஷூட்டிங் முடிந்தபின், மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்றும் இந்தப் படம் மே மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X