நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்

By Siva

Recommended Video

Actor Vishal: விஷாலை துருக்கியில் சந்தித்த இயக்குநர் மிஷ்கின்- வீடியோ

சென்னை: துப்பறிவாளன் 2 படத்தை எடுப்பது தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் விஷாலை துருக்கியில் சந்தித்து பேசியுள்ளார்.

அயோக்யா படப்பிடிப்பை முடித்த கையோடு விஷால் சுந்தர் சி. இயக்கத்தில் நடிக்க துருக்கி கிளம்பிவிட்டார். துருக்கியில் பைக் சேசிங் காட்சியின்போது ஏற்பட்ட விபத்தில் விஷால் காயம் அடைந்தார். காயத்தால் ஓய்வில் இருந்த விஷால் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

Mysskin meets Vishal in Turkey

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதால் அவரால் இந்தியாவுக்கு வந்து வாக்களிக்க முடியவில்லையாம். இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் துருக்கி சென்று விஷாலை சந்தித்து பேசியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தொடர்பாக விஷால், மிஷ்கின் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தயாரிக்க முன்வந்துள்ளார். துப்பறிவாளன் படம் ரிலீஸாவதற்கு முன்பே அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து விஷால் சூசகமாக தெரிவித்ததாக மிஷ்கின் கூறியுள்ளார்.

துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்கை நவம்பர் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X