பிசாசு 2 படப்பிடிப்பு தொடங்கியது… ஆண்ட்ரியா ட்வீட் !
சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவரவுள்ள படம் தான் பிசாசு 2.
இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் பூஜை முன்னரே போடப்பட்ட நிலையில் இன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சிக்கலில் மிஷ்கின்
சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன்2ம் பாகத்திற்கான பணிகளை தொடங்கிய மிஷ்கின் தயாரிப்பு நிறுவனத்துடன் சில சிக்கல்களை சந்தித்து அதனை கைவிட்டு, பிசாசு படத்தின் 2ம் பாகத்தினை கையில் எடுத்துள்ளார்.

முதல் பாகத்தின் வெற்றி
பிசாசு படத்தின் முதல் பாகம் வெற்றி பெற, நம்பிக்கையுடன் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை தொடங்கி முதல் கட்டமாக படத்தின் பாடல்கள் பதிவு பணிகளை மேற்கொண்டு வந்தார். இது குறித்து அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்தும் வந்தார்.

படத்தின் போஸ்டர்
ஆண்ட்ரியாவின் பிறந்தநாளன்று பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. அதன் சுவாரசியமான பின்னணி குறித்து ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தி எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தார்.

லீட் ரோல்
அவள் , சுந்தர் சியின் அரண்மனை ஆகிய இரண்டு திகில் படங்களை தொடர்ந்த தற்போது மிஸ்கினின் பிசாசு 2 படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க உள்ளார்.

ஆண்ட்ரியா ட்வீட்
இதை தொடர்ந்து இன்று பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என ஆண்ட்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்திற்காக திண்டுக்கல்லில் பிரம்மாண்ட செட் அமைத்து படக்குழு ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











